தீபாவளி பட்டாசு; சுற்றுசூழல் பாதுகாப்பு இப்போது மட்டும் வெடிப்பது ஏன்?

சுற்றுச்சூழல் பாதிப்பு என கூறி ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசு பட்டாசுக்கு தடை விதித்துள்ளது.

தில்லியில் ஆம் ஆத்மியின் அரசு பசுமை பட்டாசுக்கு மட்டுமே அனுமதி என கூறியுள்ளது. தமிழக அரசு பட்டாசுக்கு காலை மாலை ஒருமணி நேர அனுமதி, மீறினால் நடவடிக்கை என்கிறது. பாமகவின் ராமதாஸ் ‘தீப ஒளிக்கு தீபம் மட்டும் ஏற்றுவோம்’ என கூறி பட்டாசு தடைக்கு ஆதரவாக உள்ளார். சீமான் உள்ளிட்டோரும் பட்டாசு தடையில் குறியாக உள்ளனர்.

இவர்களுக்கு பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்தோ, குழந்தைகளின் சந்தோஷம், ஹிந்து பாரம்பரியப் பழக்க வழக்கங்கள், நம்பிக்கை குறித்த எந்த கவலையும் இல்லை. இவர்களின் தேவை எல்லாம் சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் மட்டுமே என்பது இதன் மூலம் தெளிவாகிறது.