தி.மு.க., பெண்களை கேவலப்படுத்துகிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். நாகைப்பட்டினம் பா.ஜ., வேட்பாளர் எஸ்.ஜி.எம். ரமேஷை ஆதரித்து அண்ணாமலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அண்ணாமலை பேசியதாவது: தாய்மார்களை கேவலப்படுத்தும் திமுகவினருக்கு தேர்தல் நேரத்தில் சரியான பதிலடி கொடுங்கள்.
தமிழகத்தில் இதுவரை தாய்மார்களை திமுக ஆட்சியாளர்களை போல் யாரும் அவமதித்ததில்லை. தி.மு.க., பெண்களை கேவலப்படுத்துகிறது. ரூ. ஆயிரம் உரிமைத்தொகை கொடுப்பதால் தாய்மார்கள் மினுமினுப்பதாகவும் , இலவச பஸ் பயணத்தை ஓசி என்று சொல்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, கடலூர் தொகுதி பா.ம.க வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்ட போது பேசியதாவது: அடித்தட்டு மக்களுக்காக மத்திய பா.ஜ., ஆட்சி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. தங்கர் பச்சானின் வெற்றி என்பது சாமானிய மக்களின் வெற்றியாகும். கடந்த 70 ஆண்டுகளாக, தமிழ் மொழியை வியாபாரமாக்கித் தமிழகத்தைச் சுரண்டிக் கொழுத்த தி.மு.க.,வின் தமிழுணர்வு நாடகத்தை, தமிழக மக்கள் இனியும் நம்புவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் நினைத்தால், ஏமாற்றமே பரிசாகக் கிடைக்கும். பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்களை பிடித்திருப்பதால் தான் அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறார். இவ்வாறு அண்ணாலை கூறினார்.