இன்ஜினியரிங் படித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 25 வயது பெண், தனது பக்கத்து தெருவில் வாடகை வீட்டில் வசித்த ஷேக்முகமதுவை காதலித்துள்ளார். ஷேக் முகமதுவின் தாயும் இதற்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் ஷேக் முகமதுவை நம்பிய அப்பெண் அவரிடம் தன்னை ஒப்படைத்தார். இந்நிலையில், 2019ல் ஷேக் முகமது குடும்பம் திருச்சிக்கு குடி பெயர்ந்தது. அதன்பின், அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததோடு அலைபேசி எண்ணையும் ‘பிளாக்’ செய்துள்ளார் ஷேக் முகமது. இதனால், மனமுடைந்த பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதிய நான்கு பக்க கடிதத்தில், மோசடியாக தன்னை திட்டமிட்டு காதலிப்பதாக கூறி, பாலியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளார் ஷேக் முகமது, இதேபோல் பல பெண்களையும் ஏமாற்றியுள்ளார். இது லவ் ஜிகாத். தன் தற்கொலைக்கு காரணமான ஷேக் முகமது, அவரது தந்தை அன்வர், தாய், மாமா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். லவ் ஜிஹாத் என அந்த பெண்ணே குறிப்பிட்ட பிறகும், கேணிக்கரை காவல்துறையினர் அவர்கள் நான்கு பேர் மீதும் தற்கொலைக்கு துாண்டியதாக மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, ‘அப்பாவி பெண் பொறியாளர் தற்கொலைக்கு காரணமான ஷேக்முகமதுவை கைது செய்து, அவர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை வழக்குகள் பதிய வேண்டும். லவ் ஜிகாத் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளதால், முழுமையாக விசாரணை செய்ய வேண்டும். காவல்துறை இவ்வழக்கில் மெத்தனம் காட்டினால், தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க இதனை வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’ என கூறியுள்ளார்.