பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.
சரி குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்றால் என்ன?
பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது அவர்கள் பொதுவாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள்.ஆனால், இந்த சட்டத் திருத்தம் இதில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்யப்படுகிறது.
கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே அந்த திருத்தம்.மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இதனை எதிர்ப்பவர்கள் கூறுவது என்ன?
மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தையே இது சிதைத்துவிடும் என்கிறார்கள் இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள்.மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்கப்படுவதை எதிர்க்கட்சிகள் எதிர்கின்றன.இந்திய அரசமைப்பு மதத்தைப் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது.அதுமட்டுமல்லாமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், இது மதபாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருகிறது இந்த சட்டம் திருத்தம் என்கிறார்கள் இதனை எதிர்ப்பவர்கள்.
.இலங்கையில் இன்னல்களை சந்தித்த இலங்கை தமிழர்களை ஏன் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை என்ற கேள்வியையும் முன் வைக்கிறார்கள்.
எந்தெந்த கட்சிகள் எதிர்கின்றன?
காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி, சிபிஎம், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இதனை எதிர்கின்றன.நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இதனைக் கடுமையாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து இருக்கிறார்கள்.அதிமுக இந்த சட்டமசோதாவை ஆதரித்துள்ளது..
விலக்கப்பட்ட பகுதிகள் என ஏதேனும் இருக்கிறதா?
நுழைவு அனுமதிப் படிவம் (இன்னா்-லைன் பொ்மிட்) மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய பகுதிகளுக்கும் சட்டத் திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.?
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளும் இஸ்லாமியப் பெரும்பான்மை நாடுகள். ஒன்று அரசே இஸ்லாமிய அரசாக இருக்கிறது, அல்லது அங்கு இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவர்கள் அங்குள்ள சிறுபான்மை மக்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை என சிவராஜ் இதழின் ஆசிரியர் ஆர் ஜெகநாதன் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து இருந்தார்.
அரசு என்ன சொல்கிறது?
குடியுரிமை பெறக் குறிப்பிட்ட பிரிவினா் அனுபவிக்கும் துயரங்களைப் போக்குவதற்கு இந்த மசோதா வழிவகுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய அமித்ஷா, “காங்கிரஸ்தான் மதத்தின் பெயரால் நாட்டை பிரித்தது. அதனை சரி செய்யவே இந்த சட்டமசோதா” என்றார்.”ஏற்கெனவே வங்கதேச பிரிவினையின் போதும், உகாண்டாவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வர்கள் தாக்கப்பட்ட போதும் சில சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி அங்கிருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு இருக்கிறது,” என்று தெரிவித்தார் அமித்ஷா.
“இது .001 சதவீதம் கூட சிறுபான்மை மக்களுக்கு எதிரானது இல்லை. இது ஊடுருவல்காரர்களுக்கு எதிரானது,” என்றார்.இந்த சட்டதிருத்த மசோதாவை ஆதரித்து 293 நாடாளுமன்ற உறுப்பினர்களும் , எதிர்த்து 82 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.
பதிலளிப்பார்களா தமிழக எம்பிக்கள்
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்களை சேர்க்கவில்லை அவர்களை புறக்கணித்ததால் மூலம் மத்திய பா ஜக அரசு தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிரானது என்ற தனது முந்தய விமர்சனத்துக்கு மக்களை இட்டுச்செல்லுகிறது இந்த மசோதாவே முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளான பாகிஸ்தான் வங்காள தேசம் ஆப்கனிஸ்தான் நாடுகளில் பெரும்பான்மையினரால் துன்புறுத்தப்பட்டு துரத்தப்பட்ட சிறுபான்மை சமயத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சிறப்பு சட்டம் ஆகும் . சுற்றியுள்ள பெரும்பான்மை முஸ்லிம்களால் ஆளப்பப்படும் நாடுகளில் உள்ள முஸ்லிம்களுக்கு இந்தியாவில் எதற்கு குடியுரிமை என்ற கேள்வியை யாரும் கேட்கமாட்டார்கள் என்ற தைரியம்தான் இவர்களை இப்படி முட்டாள்தனமாக பாராளுமன்றத்திலேயே உளரச் செய்கிறது
பெரும்பான்மை இந்துக்கள் அயல்நாடுகளில் பாதிக்கப்பட்டபோது கேள்வி எழுப்பியதுண்டா ?
இந்த சட்டத்தில் சேர்க்கபடாத இலங்கை குறித்தும் பலர் பேசுகிறார்கள். இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட இனப்படுகொலையில் தப்பிவந்த இலங்கை வம்சாவளி தமிழர்கள் மற்றும் இலங்கை பூர்விக குடிமக்களை பாதுகாத்து மீண்டும்அவர்களது சொந்த நாட்டில் மறுகுடியமர்த்தும் வேலைகளுக்கு இந்திய அரசு போராடிவருகிறது அவர்களை ஒட்டுமொத்தமாக இந்திய குடியுரிமை வழங்கி ஏற்கனேவே பெரும் எண்ணிக்கையில் உள்ள இலங்கை பூவக்குடிகளை இந்தியராக அறிவித்தால் இலங்கையில் உள்ள அவர்களின் உரிமைகள் பாதிக்கப்டுவதோடு அவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து அந்த பகுதிகள் முஸ்லீம் பெரும்பாண்மை இடங்களாக ஆகிவிடும் மேலும் இந்தியாவின் பல்வேறு நமது பாரம்பரிய
உரிமைகளும் கைவிவிட்டுப்போய் விடும். எனவேதான் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை பற்றி அந்த மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை . மேலும் தி மு க உறுப்பினர் தயாநிதி மாறன் ஆக்கிரமிப்புகாஷ்மீர் மக்கள் என்ன ஆவார்கள் என்று தங்களது முஸ்லீம் மீதான கரிசனத்தால் கேட்டிருக்கிறார் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் சேர்ந்ததுதான் இந்திய காஷ்மீர் மாநிலம் என்று 1996 ம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சியின் போது பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை எவர் அறிவாரா என்பது தெரியவில்லை இதுமாதிரியான பிதுக்குழிகளித்தான் தி மு க பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளது என்பது வெட்கக்கேடானது.
ஏற்கனவே சட்டவிரோதமாக பங்களாதேஷ் ,மியான்மர் நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியுள்ள ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக வக்காலத்து வாங்கும் இந்திய , அரசியல் கட்சிகள் முஸ்லீம் பெரும்பான்மையான மலேசியாவில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஹிந்துக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புகளை எதிர்த்ததுண்டா . அல்லது கண்டனம் செய்ததுண்டா ? அங்கு பல ஆலயங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது மேல்நிலை கல்வியுரிமை மறுக்கப்பட்டது ஆரம்பக்கல்வி தாய்மொழியில் பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது அப்போதெல்லாம் கண்மூடி மவுனமாக கண்டும் காணாது இருந்த இவர்கள் தற்போது இலங்கை தமிழர்களை பற்றி பேசுவது னைக்கிறதே என்று ஓநாய் கண்ணீர் சிந்துவதற்கு சமம்.
முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் எகிப்து சிரியா குவைத் என்று எல்லா நாடுகளுக்கும்எதிராக கோஷமிடும் இந்திய எதிர்க்கட்சிகள் மொரிசியஸ் நாட்டில் பெரும்பான்மை மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை உள்ளூர் இனவாத கிறிஸ்தவ கும்பல்கள் ராணுவத்துடன் சேர்ந்து கொண்டு ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டு அரசியல் சாசனத்தையே தங்களுக்கு ஆதரவாக மாற்றியபோது அமைதி காத்தவர்கள் , இலங்கை ஹிந்துக்கள் பிரச்சனையை மொழி பிரச்சனையாகி அவர்களை நீர்மூலமாக்கியவர்கள் என்று அவர்களின் மேல் பாசத்தோடு பேசுவது எல்லாம் உலகமகா நடிப்புடா சாமி என்று சொல்ல தோன்றுகிறது.