ஒரே இரவில் பிரபலமான லடாக் எம்.பி.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியதோடு, காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக்கியது. இது தொடர்பான மசோதாவும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேறியது.

இதுதொடர் பாக நடந்த விவாதத்தின் போது, 370-வது பிரிவை நீக்கி யதற்கும் ஜம்மூ-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிர தேசங்களாக காஷ்மீர் பிரிக் கப்பட்டதற்கும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், லடாக் எம்.பி, ஜாம்யாங் சேரிங் மக்களவை யில், உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.

அவையில் இதுவரை அமைதி யாக இருந்துவந்த ஜாம்யாங், உரையை கேட்டு வியந்த பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

லடாக்கின் லே பகுதியில் தச்சு வேலை செய்யும் தொழிலாளியின் மகனாக சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜாம்யாங், 33 வயதே ஆனவர். லே பகுதியின் உரிமை களுக்காகவும் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு ஆதாரங்களோடு உணர்ச்சிபூர்வமாக பதில் அளித் தும் மக்களவையில் ஜாம்யாங் ஆற்றிய உரை அவரை நாடு முழு வதும் பிரபலமாக்கி உள்ளது.