காஷ்மீர் குறித்த மசோதாவில் சாதகமான அம்சங்கள் உள்ளன – காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் கருத்து

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீக்கியும், காஷ்மீரை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக்கியும் மத்திய அரசு கொண்டுவந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸின் மூத்த தலைவரான கரண் சிங்கும் மசோதாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் தொடர்பான மசோதாவை முழுமையாக எதிர்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த மசோதாவில் பல நல்ல அம்சங்கள் உள்ளன. லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் லடாக் பகுதி வளர்ச்சி அடையும். 1965-ம் ஆண்டே லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.

இந்த மசோதா மூலம் எல்லை களை புதிதாக வரையறுக்க முடியும். இதன் மூலம் காஷ்மீர் பகுதியில் சரியான, நேர்மையான அரசியல் அதிகாரப் பகிர்வு உறுதிப்படுத்தப்படும்.

காஷ்மீரை முழுமையான மாநிலமாக விரைவில் அறிவிக்க வேண்டும். இதன் மூலம் நாட்டின் மற்ற பகுதிகளைப் போல மக்கள் அரசியல் உரிமைகளை அனுபவிக்க முடியும். மாறியுள்ள சூழ்நிலையில், காஷ்மீரின் முக்கிய கட்சிகளான மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய மாநாட்டு கட்சிகளின் தலைவர்களை விரைவில் விடு தலை செய்வதோடு அவர்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும்.

இவ்வாறு கரண் சிங் கூறி யுள்ளார்.