பாரம்பரியம் பழக்கவழக்கங்கள் இவை சமயம் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறிப்பிட்ட வயதினரான பெண்கள் சபரிமலைக்கு செல்வதில் உள்ள கட்டுப்பாடு பாலின பாகுபாடும் இல்லை, சமத்துவமின்மையும் அல்ல; சபரிமலை சன்னிதானத்தின் அலாதி தன்மையுடன் தொடர்புடையது. இதுதொடர்பான நீதித்துறையின் மேலாய்வு, அரசியல் சாசனம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அறிஞர்களின் கருத்துக்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மறுசீராய்வு மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உள்ளதை வரவேற்கிறோம்.
திரு. அருண்குமார் அகில பாரத பிரச்சார பிரமுக் ஆர் எஸ் எஸ்.