“திருமா”வுக்கு கண்டனம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பு கட்சிப் பொதுக்கூட்டத்தில் ஹிந்து கோயிலை அவமானப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

கூம்பாக இருந்தால் மசூதி, உயரமாக இருந்தால்  தேவாலயம்,  அசிங்கமான பொம்மைகள் இருந்தால் ஹிந்து கோயில் என்று பேசியுள்ளார். இதன் வீடியோ சமூக வலைதளத்தில்  வேகமாக பரவிவருகிறது. இதனை பல ஹிந்து இயக்கத் தலைவர்கள் கண்டித்து உள்ளனர். தொடர்ந்து தொல்.திருமாவளவன் ஹிந்து மதத்தை அவமதித்து பேசி வருவதை போல் மற்று மதத்தினரின் மசூதியோ,  சர்ச்சுகளையோ அவமதிக்கும் வகையில் பேச முடியுமா என்று கேட்கின்றனர். அவர் பேசி சுமார் ஒரு வாரக்காலம் முடிந்தும் இது குறித்து எந்த ஊடகமும் விவாதம் நடத்தவில்லையே ஏன்?  இதே ஹிந்து மத தலைவர்கள் மாற்று மதத்தை அவமானப்படுத்தும் வகையில் பேசியிருந்தால் பொங்கியெழுந்து ஊடகங்கள் விவாதம் நடத்தாமல் இருப்பார்களா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.