ஆரியம் அறிவோம்…

ஆரிய திராவிடம் வேற்றுமையை ஏற்படுத்துவது திராவிட நாத்திக கும்பலின் கலாச்சார பயங்கரவாத செயலாகும்.

ஆரியம் அறிவோம்:

ரிக்வேதத்தில், 34 ஸ்லோகங்களில், 36 முறை “ஆர்ய” என்னும் சொல் பயின்றுவந்துள்ளது. ஆனால் அத்தனை இடங்களிலும் ஒரே பொருளில் அது கையாளப்படவில்லை.

“மதிக்கத்தக்க, போற்றத்தக்க, விஸ்வாசமுள்ள ஒருவன்”, “ஆர்யவர்த்தத்தில் வசிப்பவன்”, “ஆர்யவர்த்தத்தின் கொள்கைகளுக்கு விஸ்வாசமாக இருப்பவன்”, “அநார்யர்களாகிய தஸ்யூக்களல்லாத ஆர்யவர்த்த இனத்தவன்”, “மிக உயர்வாக மதிக்கப்படுபவன்”, “மதிப்பிற்குரியவன்”, “போற்றத்தகுந்தவன்”, எஜமானன்”, “நண்பன்”, என்பது போன்ற பல்வேறு மாறுபட்ட பொருள்களில் ஆர்ய என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலும், ரிக் வேதத்தில் தனித்த மொழியடையாளம் சார்ந்த, இன அடையாளம் சார்ந்த பொருளில் “ஆர்ய”, என்னும் சொல் கையாளப்படவில்லை. சுருக்கமாக கூறுவது என்றால் ஆரியன் என்று சொல்லுக்கு சான்றோன் என்ற சொல்லே பொருந்தும். சான்றோன் என்றால் சகல மேன்மையையும் பெருமையையும் உடையவன் என்று பொருள்படும்.

வீர வைகுண்டரின் அவதாரமான அய்யா முத்துகுட்டி சுவாமிகளின் அகிலத்திரட்டு அம்மானையில் சான்றோர்களின் தர்மத்தை பற்றி விளக்கி பாடியுள்ளார்.

மேலும்,

மாகவிபாரதியின்  பாடல்களில் …

‘ஆரிய’  எனும்  சொல்லாடல்

  1. தமிழ்த் தாய் பாடலில்……………

ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தெ – நிறை

மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

இதில் நமக்கு தமிழ் இலக்கணம் வகுத்த தொல்காப்பியரின் குருநாதர் அகஸ்திய மாமுனிவர் ஆரியரே. தமிழின் முதல் இலக்கணம் வகுத்தவன் ஆரியனே என்பது தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது.

  1. ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்

ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்.

இங்கு ஆரியத்திற்கு நிகர் என்பது தமிழ் தான் என்பது குறிப்பிடுகிறார்.

இதற்கு உதாரணமாக

மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்

முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்

ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்

இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்

வாரி மதகளிறே போல்வான் கண்டாய்

மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

-திருநாவுக்கரசர் தேவாரம்
(காலம் பொபி.6ஆம் நூற்றாண்டு

பொருள்: மறைக்காட்டுள் உறையும் மணாளன் மிகவும் முழங்குகின்ற ஒலியை உடைய நீரின் வடிவினனாய், தழல் போன்ற சிவந்த மேனியை உடைய முதல்வனாய், ஏரி நீர் நிறைந்ததனை ஒத்த செல்வனாய்ச் சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய், ஆரியனாய்த் தமிழனாய், அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும் தலைவனாய், வெள்ளம் போல மதத்தைப் பெருக்குகின்ற மதயானை போல்வானாய் உள்ளான்.

ஆரியம் என்பது   சமஸ்கிருத மொழியாக இருந்தால் அதற்கு இணையான மொழி தமிழ் என்கிறார் பாரதி. இரண்டும் சமம் என்று அப்பர் பெருமானும் சொல்கிறார். ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் – ஆரிய மொழியாக இருப்பவனும் சிவபெருமானே, தமிழாக இருப்பவனும் சிவபெருமானே.

“பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே “

இமயத்தில் வாழும் சிவனையே ஆரியன் என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் பாடுகிறார்.

ஆரிய நாடு எது?

  1. பாரத தேவியின் திருத் தசாங்கம் பாடலில்……

பேரிமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும்

ஆரிய நாடென்றே அறி

நமது பாரத நாடு முழுவதும் ஆரியம் என்று உணர்த்துகிறார்.

ஆரியர் யார்?

  1. சங்கு என்ற பாடலில்………………

பொய்யுறு மாயையை பொய்யெனக் கொண்டு

புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே

ஐயுறவின்றிக் களித்திருப்பவராவர்

ஆரியராம் என்று இங்கூதேடா சங்கம்!

இதன் பொருள்:  மாயை அறிந்து   ஐம்புலன்களின் உறவினை நீக்கிய ஒருவனே ஆரியர் ஆவான். ஆகையால் ஆரியோர் என்பவன் சான்றோன் ஆவான்.

இதையே திருமூலநாநர் அருளிய திருமந்திரம்

மூன்றாம் தந்திரம்

10-ம் திருமுறையல்

ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள

வீசிப் பிடிக்கும் விரகு அறிவாரில்லை

கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்

வாரிப் பிடிக்க வசப்படுந்தானே.

திருமந்திரம் முதல் தந்திரம் உபதேசம் 10-ம் திருமுறை திருச்சிற்றம்பலம்

சூரிய காந்தமும் சூழ் பஞ்சும் போலவே

சூரிய காந்தம் சூழ் பஞ்சைச் சுட்டிடா

சூரிய சந்நிதியிற் சுடுமாறு போல்

ஆரியன் தோற்ற முன் அற்ற மலங்களே.

இப்பாடல்களில் வாசி பயிற்சியான பிராணாயாமம் அறிந்தவனே ஆரியன் என்று குறிப்பிடுகிறார் . வாசிப் பயிற்சியால் மட்டுமே ஐம்புலன்களையும் வெல்ல முடியும் என்பது யோக மார்க்கம்.

  1. வாழிய செந்தமிழ் பாடலில்…………………

அறம் வளர்ந்திடுக ! மறம் மடிவுறுக!

ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்

சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!

ஆரிய நாட்டினர் என்பது நம் பாரத நாட்டினரை குறிக்கிறார்.

  1. பாரத மாதா என்ற பாடலில்……………………

முன்னை இலங்கை அரக்கர் அழிய

முடித்தவில் யாருட வில்? – எங்கள்

அன்னை பயங்கரி பாரத தேவி நல்

ஆரிய ராணியின் வில்

சித்தமயம் இவ்வுலகம் உறுதி நம்

சித்தத்தில் ஓங்கிவிட்டால் – துன்பம்

அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல்

ஆரிய ராணியின் சொல்.

இப்பாடலில் ஆரியரின் ராணியாக நமது பாரத மாதாவைப் போற்றுகிறார்

7.தாயின் மணிக்கொடி என்ற பாடலில்…………………

அணி அணியாயவர் நிற்கும் – இந்த

ஆரியக் காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ?

ஆரிய காட்சி என்பது நம் பாரத இனத்தின் ஒற்றுமைக் காட்சி

8.சத்ரபதி சிவாஜி என்ற பாடலில்…

(மொகலாயர் பற்றி)

பாரதப் பெரும்பெயர் பழிப்பெயராக்கினர்

சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்

வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்

ஆரியர் புலையருக்கு அடிமைகளாயினர்.

மேலும்

  1. ஆரிய! நீதி நீ அறிகிலை போலும்!

பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை

அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்

பெரும்பதத் தடையுமாம் பெண்மை எங்கெய்தினை?

பேடிமை அகற்று! நின் பெருமையை மறந்திடேல்!

ஈடிலாப் புகழினோய் எழுகவோ எழுக

(பகவத் கீதையில் கண்ணன் சொன்ன பகுதி)

  1. லாஜபதிராயின் பிரலாபம் என்ற பாடலில்…………

சீக்கரெனும் எங்கள் விறற் சிங்கங்கள் வாழ்தருநல்

ஆக்கமுயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு

ஆரியர் பாழாகா தருமறையின் உண்மை தந்த

சீரியர் மெய்ஞான தயானந்தர் திருநாடு

(சீக்கியரை சிங்கங்கள் என்றும், பஞ்சாபில் ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதி வேதத்தின் உண்மைப் பொருளை தந்தார் என்பதையும் பாராட்டும் பாடல் இது)

இவ்வாறு  மேற்கண்ட  பாரதி பாடல்களில்  ‘ஆரிய’ என்ற சொல்லை காணலாம்.  பாரதியார்  ஆரியர்  எனும்  சொல்லை  அதன்  உண்மையான, மேன்மைப் பொருளில் பயன்படுத்தியுள்ளார்.    F

தொடர்புக்கு : nanthihanuman@gmail.com