வங்காளம் அக்னி பிழம்பாக உள்ளது. இன்னும் கலவர நெருப்பு முற்றிலுமாக அணைந்து விட வில்லை. ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்தே அட்டூழியங்கள் அடுக்கடுக்காக நடைபெறத் தொடங்கி விட்டன.
நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வக்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட உடனேயே மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்களின் வெறியாட்டம் தொடங்கி விட்டது. இதன் பிராதன களமாக முர்ஷிதாபாத் மாறிவிட்டது.
ஏப்ரல் 6ம் தேதி ராமநவமியாகும். இதை ஹிந்துக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். கொல்கத்தா வீதிகளில் ராமநவமியையொட்டி ஊர்வலம் நடைபெற்றது. எல்லா மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்பட்டது. ஏப்ரல் 8ம் தேதி வக்பு திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தார். குடியுரிமை திருத்தச் சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டவுடன் அதற்கு அடுத்த நாளே முர்ஷிதாபாத்தில் கலவரம் வெடித்தது.
2019ல் நடைபெற்ற இந்த நிகழ்வு, இப்போது 2025லும் மறு அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டன. போலீஸ் வாகனங்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. தீவைத்து வாகனங்கள் எரிக்கப்பட்டன. இவ்வளவு அசம்பாவிதங்களுக்கு இடையே மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, `எங்கள் மாநிலத்தில் வக்பு சட்டம் அமலாக்கப்படமாட்டாது’ என்று அறிவித்தார். மேற்கு வங்காள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஆளுநரின் உதவியை நாடுங்கள். மத்திய படைகளின் உதவியைக் கோரி பெறுங்கள் என மாநில அரசின் தலைமைச் செயலாளருக்கும், முர்ஷிதாபாத் மாவட்ட ஆட்சியருக்கும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் மேற்கு வங்காள அரசு இதை பொருட்படுத்தவில்லை. ஏப்ரல் 10ம் தேதி கொல்கத்தாவில் ஜமாத் − இ − உலமா சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இதில் மாநில நூலகத்துறை அமைச்சர் சித்திக்யுல்லா செளத்ரி முன்னின்று நடத்தினார். காவிக்கொடி எங்கும் பறக்கக்கூடாது. காணும் இடமெல்லாம் பிறை கொடிதான் பறக்க வேண்டும் என முஸ்லிம்கள் கொக்கரித்தார்கள். நிமிடத்துக்கு நிமிடம் வன்முறையின் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றது. காவல்துறை ஸ்தம்பித்து விட்டது என்றே கூறலாம்.
ஏப்ரல் 10ம் தேதி பயங்கரவாதி தகாவூர் உசேன் ராணா டெல்லிக்கு கொண்டுவரப்பட்டார். இதையடுத்து மேற்கு வங்காளத்தில் வன்முறை உச்சம் பெற்றது. ஏப்ரல் 11ம் தேதி ஜலங்கியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் தாக்கப்பட்டது. வாகனங்கள் எரிக்கப்பட்டன. துலியன் என்ற இடத்தில் கிழக்கு ரயில்வேக்கு சொந்தமான உடைமைகள் சூறையாடப்பட்டன. துலியன் – நிம்தியா ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் கிளர்ச்சியாளர்கள் அமர்ந்து விட்டனர். அந்தப் பாதையில் எந்த ரயிலும் செல்ல முடியவில்லை. இது பல மணி நேரம் நீடித்தது. இரவு 9.50 மணியளவில் எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட மத்திய படைகள் தலையிட்டதையடுத்து சகஜ நிலை ஓரளவுக்கு திரும்பியது.
முஸ்லிம்களின் வெறியாட்டத்தால் பல்வேறு இடங்களில் ஹிந்துக்கள் உயிரிழந்தனர். முர்ஷிதாபாத் பகுதியில் வாழவே முடியாது என்ற அச்சம் காரணமாக அங்கிருந்து ஹிந்து குடும்பங்கள் பல வெளியேறி விட்டன. இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மால்டாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேற்கு வங்காள வன்முறை மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போசையே அதிர்ச்சிக்கு ஆளாக்கி விட்டது. அவர் எச்சரிக்கும் தொனியில் சில விஷயங்களை பதிவிட்டார்.
எல்லைப் பாதுகாப்புப் படை போன்ற மத்திய படைகள் சம்பவ இடத்துக்கு வந்தபிறகுதான் மக்களிடையே பாதுகாப்பு சார்ந்த நம்பிக்கை ஏற்பட்டது. மாநில அரசை ஹிந்துக்கள் நம்பத் தயாராக இல்லை. ஜிகாதிகளின் புரவலனாகவே மாநில அரசு இயங்கி வருகிறது. தெற்கு மால்டா நாடாளுமன்ற தொகுதியின் கீழ்தான் துலியன் நகர் வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இஷாகான் செளத்ரி இத்தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் தனது தொகுதியில் நடைபெற்ற வன்முறை குறித்து உடனடியாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அவரது மெளனம் ஹிந்துக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் முஸ்லிம்களை தாஜா செய்வதற்காக ஹிந்துக்கள் மீது துவேஷத்தை கக்கிக் கொண்டே இருக்கின்றன. ஹிந்துக்களிடையே எழுச்சி ஏற்பட்டால் மட்டுமே இதற்கு பதிலடி கொடுக்க முடியும்.
கட்டுரையாளர் : செய்தியாளர், கொல்கத்தா
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி