“நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதன் 50-ஆம் ஆண்டையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே, “அவசரநிலையின் போது பாரத அரசியலமைப்பு சாசனத்தின் முகவுரையில் இரண்டு வார்த்தைகள், அதாவது மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் ஆகியவை சேர்க்கப்பட்டன. ‘”சோசலிஸ்ட்” மற்றும் “மதச்சார்பற்ற” வார்த்தைகள் அரசியலமைப்பில் எவ்வாறு நுழைந்தன என்பதை நாம் ஆராய வேண்டும். அதுபற்றி விவாதம் நடத்துவது தகுதியானது என்றார்.
விவாதம் நடத்துவது தகுதியானது என கூறியதை மாற்றி இந்த இரண்டு வார்த்தைகளும் முகவுரையில் இருக்க வேண்டுமா? அவை நீக்கப்பட வேண்டும்” என்று கூறி இருப்பதாக குற்றம் சுமத்தி பிரிவினைவாதிகள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் 1976-ம் ஆண்டு, 42-வது திருத்தச் சட்டத்தின் பிரிவு 2-ன் கீழ் ‘சோசலிச, மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகள், அரசியலமைப்பு சட்ட முகவுரையில் சேர்க்கப்பட்டன. அவசரநிலையின் போது, இந்திரா காந்தியால் அவரது சுயநலத்திற்காக சேர்க்கப்பட்டது என்பதை மறந்து விட்டு, ஆர்எஸ்எஸ் மீது குற்றம் சுமத்துகிறார்கள். உண்மையில் சோசலிஸ்ட் மற்றும் மதச்சார்பற்ற வார்த்தைகளை சேர்க்க அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற உண்மையை மறைக்கிறார்கள்.
“மதச்சார்பின்மை என்ற சொல் 1947-−48ம் ஆண்டு முகவுரையில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும், அந்த காலகட்டத்தில் நாட்டின் பிரிவினையும் அதன் பின்னர் ஆழமான காயங்களும் ஏற்பட்டன. அந்த நேரத்தில், டாக்டர் அம்பேத்கர், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் மற்றும் சி. ராஜகோபாலாச்சாரி போன்ற பிரபலங்கள் முகவுரையில் மதச்சார்பின்மை என்ற வார்த்தையைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்பதை முழுமையாக அறிந்திருந்தனர்,” “இந்த விஷயம் மூன்று முறை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டது. கவனமாக ஆலோசித்த பின்னரே அதைச் சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.
1948 டிசம்பர் 25-ம் தேதி திரு.கே.டி.ஷா இரண்டாவது முறையாக மதசார்பற்ற என்ற வார்த்தையை அரசியலமைப்பின் வரைவு பிரிவு 40-ல் ( தற்போது பிரிவு 51 ) சேர்க்க முன் மொழிந்தார். பெரும்பான்மையான உறுப்பினர்களின் எதிர்ப்பால், நிராகரிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக திரு. கே.டி..ஷா 1948 டிசம்பர் 3-ல் பிரிவு 18ல் (தற்போது பிரிவு -21) மதசார்பற்ற என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும் என்றார். இந்த திருத்தமும் நிரிகாரிக்கப்பட்டது. இதை தான் இந்திரா காந்தி அவசரநிலையின் போது, அரசியலமைப்பு சாசனத்தின் முகவுரையில் இணைத்தார். இந்த உண்மை பலருக்கும் தெரியாது.
எனவே, ஹோசபலே கூறியது உண்மைக்குப் புறம்பானது அல்ல, இறுதியாக 1977-ல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் தவறை சரிசெய்ய முயன்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வியால் முடிந்தது. ஏன் என்றால் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டது. இன்று வரை, இந்த சர்ச்சைக்குரிய 42வது திருத்தம் அரசியலமைப்பில் வைக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது இந்த விவகாரம் விவாதத்திற்கு வந்துள்ளது.