அயல்நாடுகளில் ஆர்.எஸ்.எஸ்

 

பாரதத்திலிருந்து அந்நிய நாடுகளுக்கு கல்வி மற்றும் தொழில் பேஈன்ற காரணங்களுக்காக குடியேறியுள்ள. சங்க ஸ்வயம்சேவகர்கள் தாங்கள் சென்றுள்ள இடங்களிலெல்லாம் சங்கத்தின் பணியை மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளனர். எண்பதுகளில்  புதிதாகத் தொடர்புக்கு வந்த நாடுகள் ஆஸ்திரேலியா, பிஜி, ஸ்பெயின், நைஜீரியா. கானரி தீவுகள் உள்ளிட்ட 82 நாடுகளில் சங்கம் உள்ளது அமெரிக்காவில் 12 ஊர்களில் ஷாகாக்கள் உள்ளன. 4 விதமான வேலைகள் வெளிநாடுகளில் நடக்கின்றன. (1) கல்யாண ஆசிரம் டிரஸ்ட் (2) சங்கவேலை (3) விசுவ ஹிந்து பரிஷத்பணி (4)  பாரத நாட்டின் உலக நண்பர்கள் கழகம் (Friends of India Society International) ஆகியவை.

கெனியாவிலுள்ள அனைத்து ஹிந்து இயக்கங்களையும் இணைக்க ‘“ஹிந்து கவுன்சில்” என்ற இயக்கம் தொடங்கப்பட்டுச் செயல்படுகிறது. அமெரிக்காவில் சங்க சிக்ஷாவர்க் நடக்க உள்ளது. நியூயார்க்கில் FISI மாநாடு நடந்தது. 17 நாடுகளிலிருந்து 305 பிரதிநிதிகள் பங்கேற்றனர். அங்கு மாதப் பத்திரிக்கை ஒன்று நடக்கின்றது.

மானனீய மோரோபந்த் சுற்றுப் பயணம்

வெளிநாடுகளில் வாழும் ஹிந்துக்களை ஒருங்கிணைக்க சங்கத்தில் விஸ்வ விபாக் செயல்படுகிறது. அந்த அமைப்பின் பொறுப்பாளராக மோரோபந்த் பாப்கோ செயல்படுகிறார். அவர் சென்ற எல்லா நாடுகளிலும் நமது நாட்டுக்கு எந்த விதத்தில் உதவ முடியும் என்றும், நமது நாட்டுக் கிராமங்களின் முன்னேற்றத்துக்காக என்ன செய்ய முடியும் என்றும் எல்லோரும் கவலையுடன் சிந்தித்து வருகின்றனர். இதற்காக அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஸ்ரீராம்கே ஹாணி என்ற ஸ்வயம்சேவகர் விடுமுறை எடுத்துக்கொண்டு பாரதம் வந்து கிராம முன்னேற்றப் பணிகளை ஆராய்ந்து வருகிறார்.

இங்கிலாந்தில் சங்கவேலை

இங்கிலாந்தில் தற்போது 12 ஷாகாக்கள் உள்ளன. வாரந்தோறும் 700-க்கும் அதிக மான ஸ்வயம்சேவகர்கள் தவறாமல் கலந்து கொள்கிறார்கள். இருபது இதர நகரங்களிலும் பெருநகரங்களிலும் ஷாகாக்கள் இல்லை என்றாலும் அங்கே உள்ள ஸ்வயம்சேவகர்களுடன் தொடர்புள்ளது.

எண்பதுகளில் ஸ்ரீ சத்யநாராயண் என்பவர், அடுத்த மூன்று வருடங்களுக்கும் கார்யவாஹ் ஹாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1978-ல் சங்கப் பயிற்சி முகாம் ஒன்றும் நடந்தேறியது. இதில் 64 ஸ்வயம்சேவகர்கள் கலந்து கொண்டனர். இங்கு சங்கத்திற்கு பல அறக்கொடை நிறுவனங்களுக்கான நிதியுதவி ‘வெம்ளி’யில் அளிக்கப்பட்டுள்ளது.

அது தீபாவளி விழாவின் போது அளிக்கப்பட்டது. பிரபல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்று நடந்த விழாவில் கலந்து கொண்டனர்.

சங்கத்தின் பொதுஜன சேவை:

அங்குள்ள நமது சங்க ஸ்வயம்சேவகர்கள் அந்நாட்டிலிலுள்ள ஏனைய பிற ஹிந்து இயக்கங்களுடன் கைகொடுத்து பல பாரத கலாச்சார விழாக்களை ஏற்பாடு செய்து. நிகழ்த்தியும் வெற்றி கண்டு உள்ளனர். ‘லெய்ஸெஸ்டரில்’ வீட்டுக்கு வீடு சென்று நமது சங்க சேவகர்கள் $3000, பாரத நாணயப்படி ரூ.55.000. பாரதத்தின் வெள்ள நிவாரண நிதிக்காக வசூல் செய்து, மகத்தான சாதனை புரிந்துள்ளனர், இளைஞர்களுக்காக ஹிந்தியும், குஐராத்தியும் இலவசமாக கற்பிக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகின்றன. இத்தகைய அரும்பெரும் சாதனைகளைப் புரியும் சங்கச் சேவையைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசாங்கம் தனது நிதியிலிருந்து $38,000, (ரூ.6.85 லட்சம்) பிரட்போர்ட்’; பிர்மிங்கம்’ ஷாகாக்களுக்கு அங்குள்ள மக்கள் நல மேம்பாட்டுக்கெனவும், கட்டிட திட்டங்களுக்கும் மானியமாக வழங்கியுள்ளது. மற்றும் பல ஷாகாக்கள் அங்குள்ள ஸ்தல ஸ்தாபன நிறுவனங்களிலிருந்தும், பொதுசேவா அறநிலையத்திலிருந்தும் உதவி பெற்று செவ்வனே நடத்தி வருகின்றனர். வெளி நாட்டில் சங்க வேலையின் வரலாற்றிலேயே முதன் முதலாக இந்தப் பகுதியை சார்ந்தவரான ஒரு பிரசாகர் முன்வந்துள்ளார். அவர் தான் நீஷாரத் என்பவர். ‘விஸ்தரக் யோஜனா’ தற்போது பரவலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் பல இளைஞர்களும், முதிய ஸ்வயம்சேவகர்களும் இவ்வருடம் ‘விஸ்தரக்’காக வருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

82 நாடுகளில் ஸ்வயம் சேவகர்கள், அமெரிக்காவில் 12 ஷாகாக்கள், சங்க சிக்ஷா வர்க்- அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பிரசாரக் – இங்கிலாந்திலிருந்து நடந்து வரும் உலக குழந்தைகள் ஆண்டை முன்னிட்டு தேசிய ‘பால முகாம், ஒன்று செப்டம்பரில் (இம்மாதத்தில்) பெய்ஷெஸ்டரில்’ பெருந்திரளாக நடத்த ஏற்பாடாகியுள்ளது. பிற்பாடு “பிர்மிங்காமில் 40 வயதுக்கு மேற்பட்டவருக்காக’ ஸ்வயம்சேவகர்களுக்கான முகாம் ஒன்று ஏற்பாடாகியுள்ளது.

1.10.1979 விஜயதசமி சிறப்பு மலரிலிருந்து