யுவ சிவிர்

குஜராத்தின் வதோதராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “யுவ சிவிர்” நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். குண்டல்தாமில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோயில் மற்றும் வதோதராவின் கரேலிபாக் ஸ்ரீ சுவாமிநாராயண் கோயில் ஆகியவை இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.  ‘ஏக் பாரத், ஷ்ரேஷ்டா பாரத்’, ‘ஆத்மநிர்பர் பாரத்’ மற்றும் ‘ஸ்வச்ச போன்ற  சமூக சேவை மற்றும் தேச வளர்ச்சியில், அதிக இளைஞர்களை ஈடுபடுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி,  “உலகளவில் நிகழும் அமைதியின்மை, மோதல் போன்ற அசாதாரண சூழலுக்கு மத்தியில் பாரதம் இன்று புதிய நம்பிக்கை பெற்றுள்ளது. புதிய பாரதம் என்பது புதிய அடையாளத்துடனும், பழங்கால மரபுகளுடன் முன்னோக்கி செல்வதே. அத்தகைய புதிய பாரதம் முழு மனித குலத்திற்கும் வழிகாட்ட வேண்டும். யோகாவின் பாதையையும், ஆயுர்வேதத்தின் சக்தியையும் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழங்குகிறது. மென்பொருளிலிருந்து விண்வெளி வரை புதிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்லும் தேசமாக நாம் உருவாகி வருகிறோம். கொரோனா நெருக்கடியின் மத்தியில் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை உலகிற்கு வழங்குவதன் மூலம், சிதறிய விநியோகச் சங்கிலிகளுக்கு மத்தியில் ஒரு தன்னம்பிக்கை பாரதம் பற்றிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளோம்’ என்று தெரிவித்தார்.