உத்தர பிரதேசம், லக்னோவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) அமைத்த அடல் பிஹாரி வாஜ்பாய் கோவிட் -19 மருத்துவமனையை, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த புதன்கிழமை அன்று திறந்து வைத்தார். “இந்த மருத்துவமனையில் முதல் கட்டமாக 250 படுக்கைகள் தொடங்கப்படுகின்றன, அதில் 150 படுக்கைகள் ஆக்ஸிஜன் படுக்கையாக மாற்றுவதற்கு ஏற்ற வகையிலும் இருக்கும். மருத்துவமனையில் சிகிச்சை, உணவு இலவசமாக வழங்கப்படும்” என்று முதல்வர் யோகி தெரிவித்துள்ளார்.