உலக கல்லீரல் அழற்சி தினம்

கல்லீரலைத் தாக்கும் ஹெபடைடிஸ் கிருமிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்லீரலைக் காக்கவும் உலக ஹெபடைடிஸ் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மஞ்சள் காமாலை நோயை ஏற்படுத்தக்கூடிய வைரஸை கண்டறிந்த, “புலும்பர்க்’ என்ற விஞ்ஞானியின் பிறந்த நாளான ஜூலை 28 உலக ஹெபடைடிஸ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

“ஹெபடைடிஸ் பி’ வைரஸால், மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இந்த வைரஸ், ஏ, பி, சி, டி, இ என்று, ஐந்து வகையில் இருந்தாலும், “ஏ மற்றும் இ’ வைரஸ் கிருமி, நம்முடைய கை சுத்தம் செய்யாமல் உணவு உட்கொள்வதன் காரணமாகத் தாக்குகிறது. இதன் பாதிப்பு, ஒரு வாரத்தில் சரியாகிவிடும். மற்ற மூன்று ஹெபடைடிஸ் வைரஸ் கிருமிகளும், ரத்தம் வழியாக பரவும் தன்மை கொண்டது.

“ஹெபடைடிஸ்’ வைரஸ் தாக்காமல் இருக்க, குழந்தைகளுக்கு “இம்யுனோகுளோபல்’ தடுப்பூசி போடப்படுகிறது. பெரியவர்களுக்கு ஹெச்.பி.எஸ்.எ.ஜி என்ற ரத்த பரிசோதனை மூலம் இதனை கண்டறியலாம். இதனை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இத்தகைய பாதிப்புகளுக்கு மதுப்பழக்கம், போதைப்பழக்கம், ரசாயனம், கொழுப்பு போன்றவையும் காரணமாக சொல்லப்படுகிறது.

கல்லீரலில் அழற்சி உள்ளவர்கள் திராட்சை ஜூஸ், கேரட் ஜூஸ் போன்றவற்றைத் தினமும் அருந்தலாம். எலுமிச்சைச் சாற்றை அதிகத் தண்ணீருடன் கலந்து குடித்து வந்தால் கல்லீரல் செல்கள் பலமடையும். அன்றாட சமையலில் பூண்டு, மோரில் சீரகத்தூள் கலந்து குடிக்கலாம். சமையல் எண்ணை, அசைவ உணவுகளை குறைப்பது அல்லது தவிர்பது நல்லது.

கல்லீரல் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் துளசி, மாதுளம்பழத்துடன் 4 ஏலக்காய், அரை துண்டு சுக்கு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் பால், தேன் கலந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு கிடைக்கும். இதைத் தவிர கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, கொத்தமல்லி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.