தாயாய் காக்கும் தாய்மதம்

அப்பாவி ஹிந்துக்களை மூளைசலவை செய்வது, பணத்தாசை, பெண்ணாசை போன்றவற்றைக்காட்டி மதமாற்றம் செய்வது நடைபெற்று வருகையில், இதனால் ஏமாந்து மதம் மாறி, உள்ள சந்தோஷத்தையும் இழந்த பலர் மீண்டும் எப்படி தாய்மதம் திரும்புவது என குழம்புகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக பல்வேறு ஹிந்து அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவ்வகையில் இதில் முதன்மையாக உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சமீபத்தில் குஜராத்தின் வாபி பகுதியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், மதமாற்றம் செய்யப்பட்ட 21 குடும்பங்கள் தங்கள் தாய்மதமான ஹிந்து மதத்திற்கு திரும்பினர். அவர்களுக்கு மாநில அரசு கொண்டுவந்துள்ள கட்டாய மத மாற்றச் சட்டம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அனுபவங்கள்:

தனது தாய் மதத்திற்குத் திரும்பியவர்கள் இதில் தங்கள் அனுபவங்களை தெரிவித்தனர். அதில் ஒருவர் கூறுகையில், தான் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு, தங்கள் சிரமங்களைத் தீர்ப்பதாக உறுதியளித்தது. இதனை நம்பி நாங்கள் பேராசையில் மதம் மாறினோம். மதம் மாறி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன, ஆனால் எங்கள் சிரமங்கள் அப்படியேதான் இருக்கின்றன என்றார். ரோஷன் லால் என்பவர் தனது அனுபவத்தில், போதைப்பொருட்களை கொடுத்து என்னை மதமாற்றம் செய்தனர். பிறகு அச்சுறுத்தி என் சொத்துக்களை அபகரித்தனர் என்றார். அரவிந்த் என்பவர் தான் வைத்திருந்த மூலிகை மருந்து கடைக்கு அடிக்கடி வந்த கலீத், நதீம் ஆகியோர் நான் மதம் மாறினால் 10 லட்ச ரூபாய் கொடுத்து ஒரு அழகான பெண்ணை திருமணம் செய்துத் தருவதாக ஆசைகாட்டினர். ஆனால், அவர்கள் அந்த தொகையை கடைசிவரை தரவே இல்லை, திருமணமும் செய்து வைக்கவில்லை என கூறினார். அமித் என்பவர் தானும் மூளைச் சலவை செய்யப்பட்டு 2014ல் அப்துல் என முஸ்லிமாக மாற்றப்பட்டதையும் பின்னர் உண்மையை அறிந்து தாய்மதம் திரும்பியதை விவரித்தார். இதில் கலந்துகொண்ட அமித்தின் தந்தை மகனின் மாற்றத்தில் மகிழ்ச்சியடைந்தார். இதேபோல உத்தர பிரதேசத்தை சேர்ந்த மூன்று இளைஞர்களும் தாய்மதம் திரும்பினர்.