டில்லி அரசு என்பது யார்?

நம் நாட்டில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசு என்பது முதல்வர் தலைமையிலான அமைச்சரவையையே குறிக்கும். ஆனால், சில நாட்களுக்கு முன்னர், டில்லியில் அரசு என்பது துணை நிலை கவர்னரை குறிக்கும் என்பதற்கான மசோதாவை சமீபத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேறியது.ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தார். கடந்த 27 முதல் இது அமலுக்கு வந்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

டெல்லி என்பது நாட்டின் தலைநகர் என்பதால் அதன் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது எனவேதான் அப்போதிலிருந்தே டெல்லி காவல்துறை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள சூழலில் அதன் பாதுகாப்பை எவ்விதத்திலும் சமரசம் செய்துகொள்ள முடியாது. எனவே தற்போது மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு மிகச்சரியானதே. இன்னும் சொல்லப்போனால் இது வெகு காலம் முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டிய நடவடிக்கை.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை சரியானதே என்பதற்கு சமீபத்தில் முஸ்லிம்கள் நடத்திய சி.ஏ.ஏ வன்முறை போராட்டங்கள், விவசாய போராட்டம் என்ற பெயரில் நடைபெற்று வரும் செயல்பாடுகளே மிக சிறந்த உதாரணம். இதற்கெல்லாம் ஊக்கம், ஆதரவு, இடவசதி என அனைத்தும் செய்து தந்தவர் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால், கடந்த 2020ல் கொரோனா பரவலின்போது எட்டு ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க மத்திய அரசு சுமார் 250 கோடிக்கும் அதிகமாக நிதியுதவி அளித்தபோதும் ஒரே ஒரு ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் மட்டும் அமைத்து மீதியை செய்யாமல் விட்டுவிட்டார் இந்த புண்ணியவான்.

அம்மாநிலத்தில் இவ்வளவு கொரோனா மரணங்கள் ஏற்பட இதுவும் ஒரு முக்கிய காரணம். எனவே இவ்விஷயத்தில் அவர் மக்களின் முன்னால் பெரிய கொலை குற்றவாளியாகவே தெரிகிறார். ஆக்ஸிஜனை தடுப்பவர்களை தூக்கில் போடுவோம் என கூறிய நீதிமன்றம் இவரை கண்டித்ததுடன் நிறுத்திக்கொண்டது ஆச்சரியம். ஒரு குற்றவாளி என தெரிந்திருந்தும் நீதிமன்றம் இவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை, டெல்லி அரசின் எதிர்கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்டோர் ஏன் இவர் மீது ஏன் இது குறித்து இன்னும் ஒரு வழக்குகூட பதிவு செய்யவில்லை என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.