அமெரிக்கா, நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகின்றன. செப்டம்பருக்கு முன்னதாகவே அனைத்து வெளிநாட்டு படைகளும் ஆப்கனில் இருந்து வெளியேறிவிடும் என தெரிகிறது. இந்நிலையில், ஆப்கனில் பாதுகாப்பு படைகளுக்கும் தாலிபன்களுக்கும் தற்போது கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல்களில் தங்கள் உயிரை காத்து கொள்ள ஆப்கன் வீரர்கள் தஜிகிஸ்தான் எல்லைக்கு சென்றுவிட்டனர். சுமார் 1,600 வீரர்கள் வரை தஜிகிஸ்தானுக்கு பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாலிபன்கள் ஆப்கனை வேகமாக கைப்பற்றி வருகின்றனர். மேலும், ஆப்கனில் மூன்றில் ஒரு பங்கு பகுதிகளை தற்போது தாலிபன்கள் கைப்பற்றியுள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆப்கன் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.