மேற்கு வங்கம் என்ற மர்மதேசம்

தமிழக ஊடகங்கள் மம்தாவின் வெற்றி இந்திய ஜனநாயகத்தின் வெற்றி என்று புகழாரம் சூட்டுகின்றன. 2016-ல் 211 இடங்களில் வெற்றி பெற்ற மம்தா, 2021ல் 2 இடங்கள் மட்டுமே அதிகம் பெற்றது மிகப்பெரிய வெற்றியாக பக்கம் பக்கமாக எழுதும் ஊடகங்கள், அங்கே 2016-ல் வெறும் 3 இடங்களில் மட்டுமே பெற்ற பாரதிய ஜனதா கட்சி, 2021-ல் 77 இடங்களில் வெற்றி பெற்றது பற்றி வாய்திறப்பதில்லை. தேர்தலுக்கு முன் நந்தி கிராமத்தில் என்னை தோற்கடிக்க முடியுமா என சவால் விட்ட மம்தாவை தோற்கடித்துக் காட்டியது பற்றி எழுதவில்லை; அவர்களின் பேனாவில் மை தீர்ந்து விட்டதே? உண்மையில் மம்தாவின் வெற்றி பாகிஸ்தான் / வங்கதேச பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தான் கொண்டாட்டம்; படியுங்கள்:

தமிழகத்தில் கூட்டணி ஊன்றுகோல் பிடித்து நடமாடும் கம்யூனிஸ்ட்களையும் காங்கிரஸ் கட்சியையும் மேற்கு வங்க மக்கள் முழுக்க நிராகரித்து விட்டார்கள். 2016-ல் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியும், 26 இடங்களில் வெற்றி பெற்ற இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியும், பா.ஜ.க. வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கத்திற்காக, பல தொகுதிகளில் திருணமூல் காங்கிரஸ் வெற்றி பெற விட்டுக் கொடுத்தன. 2021ல் முஸ்லீம்களின் வாக்குகளை முதன்மைப்படுத்தியே திருணமூல் தனது பிரச்சாரத்தை தொடங்கியது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் சுமார் 125க்கும் மேற்பட்டவற்றில் முஸ்லீம் வாக்கு வங்கி ஆதிக்கம். இந்தத் தேர்தலில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் ஆறு மாவட்டங்களில் உள்ள 118 தொகுதிகளில் பா.ஜ.க 5ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மீதி 112 லும் திருணமூல் வெற்றி பெற்றது. உபயம்: கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள்!

முஸ்லீம் வாக்குகளை பெறுவதற்காகவே 2011 மற்றும் 2016-ல் சலுகை அள்ளி வழங்கிய மம்தா. தனது அமைச்சரவையில் ஒன்பது முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்; சுமார் 60,000 இமாம்களுக்கு மாதம் ரூ.2,500 நிதிஉதவி! கொல்கத்தா உயர் நீதிமன்றம் அரசியல் சாசன ஷரத்து 14/15-ல் 1வது பிரிவின்படி மாநில அரசு வழங்கியது செல்லாது என தீர்ப்பு வழங்கியது அதையடுத்து, இமாம்களுக்கு கொடுக்கும் உதவியை வக்ஃப் வாரியத்தின் மூலம் வழங்குவதற்கு சில சட்ட திருத்தங்களை செய்தார் மம்தா. மதரஸாக்களில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கியும், மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகைவேறு. 60 வயதுக்கு மேற்பட்ட இமாம்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை அளிக்கப்பட்டதோடு, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் அரசின் தொடர்புமொழியாக உருது மொழி செயல்பாட்டிலிருக்கும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது மாநிலத்தில் 57க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகள் முஸ்லீம்
களுக்கு வழங்கப்படும் என உறுதி கொடுக்கப்பட்டு, அவ்வாறே ஆறு மாவட்டங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். தொலைக்காட்சிகளில் தஸ்லீமா நஸ்ரின் நாவல்களை நாடங்களாக ஒளிபரப்புவது தடை செய்யப்பட்டது.

அங்கீகாரம் இல்லாத மதஸாக்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட மதரஸாக்களின் எண்ணிக்கை 10,000க்கு மேல். அங்கீகாரம் வழங்கப்பட்ட மதரஸாக்கள் நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதுதான் விபரீதம்.அரசின் அங்கீகாரமற்ற ஆயிரக்கணக்கான மதரஸாக்கள், மேற்கு வங்க மாநிலத்தின் எல்லைப் பகுதியில் செயல்படுகிறது. பர்த்வான் மாவட்டத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் தொடர்புள்ள பயங்கரவாதிகள், எல்லையில் உள்ள மதரஸாவில் தஞ்சம் புகுந்திருந்தார்கள் என தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ) தெரிவித்தார்கள். மதரஸாக்களும், முஸ்லீம் கல்வி மையங்களும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான இடமாக இருப்பதை என்.ஐ.ஏ கண்டுபிடித்தது. சட்டவிரோத மதரஸாக்களுக்கு மம்தா எந்த விசாரணையும் நடத்தாமல் அங்கீகாரம் கொடுத்தது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவே மாறி வருகிறது.

நிலப்போர்/பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் துருவ் கடோச் “மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு படிப்படியாக சரிந்து வருவதற்கு முக்கியமான காரணம், வங்கதேசத்திலிருந்து ஊடுருவிய முஸ்லீம்கள்” என்கிறார். இதற்கு உறுதுணையாக இருப்பவர் மம்தா.2021-ல் திருணமூல் கட்சியால் தேர்வுபெற்ற முஸ்லீம்எம்.எல்.ஏக்கள் 42. மாநிலத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே ஊடுருவிய வங்கதேசத்தினர் 70 லட்சத்திற்கும் அதிகம்; இவர்களில் சுமார் 50 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இவர்களின் வாக்குகளை பெறுவதற்கு அரசியல் கட்சிகளுக்கிடையே போட்டி நிலவுகிறது. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மாநிலத்தில் முஸ்லிம்கள் 2.47 கோடி. இது மாநில மக்கள்தொகையில் 27 சதவீதம். இவ்வாறு முஸ்லீம்களின் வாக்குகளை கொண்டே ஆட்சியில் இருப்பதால் ஏற்படக் கூடிய அபாயத்தை மறந்து ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தைத் தவிர வேறு சிந்தனை இல்லாத மம்தாவின் ஆட்சியினால் நாட்டின் இறையாண்மைக்கே குந்தகம். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு இரண்டுக்கும் ஆதரவாக மம்தா செயல்பட மாட்டார்.

வங்கத்தில் நிழலாடும் மிகப்பெரிய அபாயம் இது: மேற்கு வங்க மாநிலம், பிகார் / உத்தரப் பிரதேசத்தில் சில மாவட்டங்கள், ஜம்மு -–காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் முஸ்லீம்கள் இணைந்த ”மொகல்ஸ்தான்” என்ற நாடு அமைப்போம் என்று பாகிஸ்தானும் வங்கதேசமும் பேசிவருகின்றன. மேற்கு வங்க மாநிலத்தைப் பிரித்து 2013-ல் அடிப்படைவாத மௌலானக்கள், மொகல்ஸ்தான் உருவாக்க கோரிக்கை வைத்தார்கள். தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறைகள் தொடர்ந்தன. குறிப்பாக ஹிந்துக் கடைகள், ஹிந்து கோவில்கள் நாசப்படுத்தப்பட்டன, தாக்கியவர்களின் மீது மம்தா அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இதற்குப் பக்கபலமாக, மம்தா 2014-ல் மாநிலங்களவைக்கு பயங்கரவாத ஆதரவாளரும், முன்னாள் சிமி இயக்கப் பொறுப்பாளருமான அகமது ஹசன் இம்ரானை தேர்வு செய்தார். இந்த நபர் வங்கதேசத்தில் கலவரத்தை உருவாக்க ஜமாத் இ இஸ்லாமி ஆஃப் பங்களாதேஷ் என்ற பயங்கரவாத அமைப்பிற்கு சாரதா சிட்பண்ட் நிதியை திருப்பி விட்டவர்; மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பலவற்றில் சம்பந்தப்பட்டவர்; மொகல்ஸ்தான் உருவாக்க முயற்சிப்பவர் என்றும் சொல்கிறது என்.ஐ.ஏ. இது பற்றி மம்தா வாய் திறப்பதில்லை. முஸ்லீம்கள் மம்தாவிற்கு ஆதரளித்ததன் சூட்சுமம் புரிகிறதா?