மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பு உடைகளுடன் நேரில் சந்தித்து பேசி ஊக்கமளித்தார். அப்போது அவர், “நான் தனிப்பட்ட முறையில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை சந்தித்து அவர்களின் மருத்துவ நிலைமைகள் குறித்து கேட்டறிந்தேன். முதலாம், இரண்டாம் கொரோனா அலையின்போது அனைத்து மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் பொறுப்புடன் சிறப்பாக நாட்டிற்குச் சேவையாற்றியதற்கு நன்றி தெரிவித்தேன். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது சுகாதாரப் பணியாளார்களும் நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இருப்பதும் ஊக்குவிப்பதும் நமது பொறுப்பு. அவர்களின் சிறந்த ஆரோக்கியத்திற்காக நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் அவர்களால் சிறப்பாகச் சேவை செய்ய முடியும்” என கூறினார்.