வி.ஹெச்.பி கோரிக்கை

பீகாரில், ஒன்றன் பின் ஒன்றாக பல இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு சவாலாக இருப்பது மட்டுமின்றி, அங்குள்ள அரசு மற்றும் நிர்வாக இயந்திரங்களில் உள்ள இடைவெளிகளை அம்பலப்படுத்தியுள்ளன. இந்த கொடூர சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள வி.ஹெச்.பியின் மத்திய பொதுச் செயலாளர் மிலிந்த் பரண்டே, ‘மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குண்டு வெடிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம். இச்சம்பவங்கள் குறித்து பரந்த அளவிலான என்.ஐ.ஏ விசாரணை தேவை. கடந்த 9 மாதங்களில் ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பல கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. ஜிஹாதி பயங்கரவாதத்தின் சாயலும், வங்கதேசத் தொடர்புகளும் இந்த சம்பவங்களில் தெரிகின்றன. பல குண்டுவெடிப்பு வழக்குகளை காவல்துறை விசாரிக்காமல் மறைத்து வருகிறது. அவை வெறும் பட்டாசு வெடிப்புகள் என்று கூறப்பட்டு விசாரணைக்கு தகுதியற்றவை என்று  ஒதுக்கப்படுகிறது. பீகாரின் பல மாவட்டங்கள் ஏற்கனவே முஸ்லீம் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளன. வெளிநாட்டு ஊடுருவல்கள் நடக்கின்றன. வங்கதேச தலிபான்களும் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். லவ் ஜிஹாதிகள் தொடர்ந்து ஹிந்து பெண்களை, குறிப்பாக பட்டியலின மற்றும் பழங்குடியினரின் பெண்களை குறி வைக்கின்றனர். பல பெண்கள் அண்டை நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளனர். சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவங்கள் குறித்து நியாயமான, விரைவான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும், என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, நியாயமான இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் என்று வி.ஹெச்.பி கோரிக்கை விடுக்கிறது’ என பேசினார்.