வேலூர் இப்ராஹிம் ஆவேசம்

மதுரை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் ஸ்ரீராம ஜென்மபூமி நிதி சமர்ப்பண ரத யாத்திரையை வேலூர் இப்ராஹிம் துவக்கி வைத்தார். அப்போது, ‘ரதயாத்திரைக்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பிறகும் காவல்துறை தடுப்பது ஜனநாயக விரோதம். இந்த ரத யாத்திரை குறித்த தவறான புரிதல்களை உடைக்க, ஒரு முஸ்லிமான நானே அதை துவக்கி வைத்தேன். முஸ்லிம் அமைப்புகள் என்ற பெயரிலுள்ள எஸ்.டி.பி.ஐ, பி.எப்.ஐ, த.மு.மு.க, போன்றவர்கள் முஸ்லிம், ஹிந்து மக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்துகின்றனர். காவல்துறை சிலரின் அச்சுறுத்தலுக்கு பயந்து மதநல்லிணக்கத்தை எடுத்து சொல்லக் கூடிய எங்களை போன்றவர்களை தடுக்கிறது’ என கூறினார்.