எல்லை மீறும் டுவிட்டர்

சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளையொட்டி, ‘பாரதத் தாயின் அருந்தவப் புதல்வனான சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளில், அவருக்கு என் மரியாதையை தெரிவிக்கிறேன். அவருடைய வெல்ல முடியாத துணிச்சல், அற்புதமான வீரம், அசாதாரணமான புத்திசாலித்தனம் போன்றவை ஒவ்வொரு இந்தியனையும், காலம் காலமாக உற்சாகப்படுத்தும். ஜெய் சிவாஜி’ என, பிரதமர் தன், டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். இதில் பிழை இருப்பதாக யாரும் கூறமுடியாது. ஆனால், ‘இது அனைவரும் படிக்கத்தக்க செய்தியல்ல, அமைதிக்குப் பாதிப்பு ஏற்படும். படிப்பவர்கள் இதனால், மன வருத்தம் அடையலாம்’ என பொய்யான காரணங்களைகூறி, டுவிட்டர் நிறுவனம், இந்தச் செய்தியை தடை செய்துள்ளது. ‘டுவிட்டரின் கருத்து சுதந்திரம் எவ்வளவு போலியானது, பாரபட்சமுள்ளது என்பதை அதன் நடவடிக்கைகளே வெளிச்சம் போட்டு காட்டுகின்றன’ என நெட்டிசன்கள் தங்கள் எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர்.