பா.ஜ.கவில் இணைந்த முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், சென்னை திருவான்மியூரில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, ‘நாத்திகம் பேசும் திராவிட தலைவர்கள் போலிகள். திராவிட கழகத்தலைவரான கி. வீரமணியின் மகனுக்கே வினை தீர்த்த விநாயகர் கோயிலில்தான் திருமணம் நடந்தது. வீரமணியோ அவரது ஆட்களோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், அதை ஆதாரங்களுடன் வெளியிடத் தயார்’ என்றார். பல கோடிகள் புரளும், தி.க அறக்கட்டளையை நிர்வகிக்கும் வீரமணியின் மகன் அன்புராஜு, ஒரு மலையாளப் பெண்ணை காதலித்தார். வீரமணி இதை ஏற்கவில்லை. காதலர்கள் தப்பியோடி கராத்தே தியாகராஜனின் உதவியை நாடினர். நாத்திகச் செம்மலின் மகன் ஆயிற்றே என தியாகராஜன் தயங்கினார். ஆனால் அன்புராஜு, ‘காதலியை கைப்பிடிக்க எதற்கும் தயார்’ எனகூறி கோயிலில் வைத்து தாலியைக் கட்டினார். ‘ஹிந்து கோயிலில் திருமணமா, ஏற்க மாட்டேன்’ என கொந்தளித்த வீரமணி, தன் கொள்கையில் உறுதியாக இருந்து கோடிகள் புரளும் ஈ.வெ.ரா அறக்கட்டளையை நிர்வகிக்க வேறு ஆட்களைத் தேடவில்லை. மாறாக சொத்துகள் கைவிட்டு போகாமல் இருக்க மகனையும் மருமகளையும் வீட்டிற்குள் அனுமதித்தார்.