வீர் சாவர்க்கர் மோஷன் போஸ்டர்

பாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனரும் தயாரிப்பாளருமான மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்கத்தில் நடிகர் ரந்தீப் ஹூடா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் ‘ஸ்வதந்த்ரா வீர் சாவர்க்கர்’ சுதந்திர போராட்டத்தில் மிக மிக முக்கிய பங்கு வகித்தவரும் முந்தைய ஆட்சியாளர்களால் சுதந்திர போராட்ட வரலாற்றில் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டவருமான வீர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை சொல்கிறது இந்த திரைப்படம். எப்போது வெளியாகும் என பலராலும் மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. பாரதத்தின் சுதந்திர போராட்ட வீரரான விநாயக் தாமோதர் சாவர்க்கரின் 139வது பிறந்தநாளை முன்னிட்டு படத்தயாரிப்பாளர்கள் அந்த திரைப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். நடிகர் ரன்தீப் ஹூடா தனது டுவிட்டரில் இந்த படத்தின் அரை நிமிட மோஷன் போஸ்டரை, பின்னணியில் ‘சாரே ஜஹன் சே அச்சா…’ என்ற அற்புத இசையுடன் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘பாரதத்தின் சுதந்திரம் மற்றும் சுய உணர்தல் போராட்டத்தின் மிக உயர்ந்த அதிகம் அறியப்படாத ஹீரோக்களில் ஒருவருக்கு சல்யூட். ஒரு உண்மையான புரட்சியாளரின் இவ்வளவு பெரிய பாத்திரத்தை திரைப்படத்தில் நிரப்பும் சவாலை என்னால் எதிர்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். இவ்வளவு காலமாக மறைக்கப்பட்ட அவரது உண்மையான கதையை நாம் சொல்ல முடியும். வீர்சாவர்க்கர் ஜெயந்தி’ என பதிவிட்டுள்ளார்.