கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்” சுதந்திர தின அறிவிப்பையடுத்து, ரயில்வேதுறை, 75 வாரங்களில் 75 ‘வந்தே பாரத்’ ரயில்களை வெளியிடுவதாக அறிவித்தது. அவ்வகையில் ரூ. 2,500 கோடி மதிப்பீட்டில், 58 வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரிக்கும் இரண்டாவது டெண்டரை ரயில்வே துறை செயல்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பாம்பார்டியர், சீமென்ஸ், பி.ஹெச்.இ.எல், சி.ஜி பவர், மேதா, டிடாகர் வேகன் உள்ளிட்ட 9 நிறுவனங்கள் இதற்காக ஏலத்தை சமர்ப்பித்துள்ளன. முன்னதாக, கடந்த ஆண்டு தொடக்கத்தில், ஐ.சி.எஃப் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் 44 வந்தே பாரத் ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை மேதா நிறுவனத்திற்கு ரயில்வேதுறை வழங்கியிருந்தது.