கம்யூனிச குடும்ப அரசியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 2 வார்டுகள் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 2 வார்டுகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர நிர்வாக குழு உறுப்பினர் தங்கமணியும், அவரது மனைவியும், மாதர் சங்கம் மணப்பாறை நகரத் தலைவியுமான மனோன்மணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 2 இடங்களிலும் மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களே போட்டியிடுவது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.