வ.களத்தூர் கோயில் திருவிழாவும் நீதிமன்ற தீர்ப்பும்…

“மத சகிப்புத்தன்மையின்மை நாட்டின் மதச்சார்பின்மையைச் சீர்குலைத்துவிடும்” என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை அளித்திருக்கிறது. வ.களத்தூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்லாமியர்களுக்கும், அவர்களுக்கு சாமரம் வீசிய அரசியல் கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும் சம்மட்டி அடியாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில், தொழுதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது வண்ணாரம்பூண்டி களத்தூர், சுருக்கமாக வ.களத்தூர். இங்கு சுமார் 8,000 பேர் வாழ்கின்றனர். இவர்களில் இஸ்லாமியர் சுமார் 4,000 பேர்; மீதமுள்ளோர் ஹிந்துக்கள்.இந்தக் கிராமத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுடன் இணைந்து செல்லியம்மன் கோயில், ராயப்பா கோயில், மாரியம்மன் கோயில் ஆகியவை உள்ளன. இவை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் மாரியம்மன் கோயில் திருவிழாவை நடத்துவதில் தான் இஸ்லாமியர்களின் எதிர்ப்பால் சர்ச்சை ஏற்பட்டு தற்போது உயர்நீதிமன்றம் ஹிந்துக்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து, நீதியை நிலைநாட்டி இருக்கிறது.

என்னதான் பிரச்னை?
வ.களத்தூரில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 3 நாள் திருவிழா நடக்கும். முதல் நாள் செல்லியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், ராயப்பனை (கிராம தேவதை) அழைத்தல், இரண்டாம் நாள் மாரியம்மன் தேர் உற்சவம். மூன்றாம் நாள் மஞ்சள் நீராட்டு வைபவம். ஜாதி பேதமில்லாமல் அனைத்து ஹிந்துக்களும் ஒன்றிணைந்து நடத்தும் விழா இது.நூறு ஆண்டுகளுக்கு முன், தேரோடும் வீதிக்கு அடுத்த தெருவில் மசூதி கட்ட ஹிந்து பெரியவர்கள் ஒப்புக் கொண்டனர். அதுதான் இன்றைய பிரச்னைக்கு மூலகாரணம் ஆகிவிட்டது.இஸ்லாமியர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்த வரை ஊருக்குள் பிரச்னை இல்லை. அவர்கள் எண்ணிக்கை கூடக் கூட,கோயில் ஊர்வலத்தில் மேளம் வாசிக்கக் கூடாது; முஸ்லிம்கள் வசிக்கும் தெருக்களில் தேர் ஓட்டக் கூடாது (தற்போது சகடை எனும் சிறிய வகைத் தேர்தான் ஓட்டப்படுகிறது) என ஆரம்பித்து, பின்னாளில் கோயில் திருவிழாவே நடத்தக் கூடாது என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டது.

வ.களத்தூரில் பிரச்னை தோன்றிய காலம் 1895-லிருந்தே ஆரம்பிக்கிறது. அப்போது ஓரு கலவரம் ஏற்பட்டது. பின்னர் 1951ம், 1990ம், 2013ம் முஸ்லிம்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது ஹிந்துக்கள் ஒன்றுசேர்ந்து பதிலடி கொடுத்ததால், முஸ்லிம்கள் பின்வாங்கினர்.இனப்பெருக்கம், வெளியூர் உறவினர்களைக் குடியேற்றுதல் மூலமாக, தங்கள் மக்கள்தொகையைக் கூட்டிக் கொண்டனர் இஸ்லாமியர்கள். ஜிகாத் பேரவை, தமுமுக, பிஎஃப்.ஐ. போன்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களும் வளரத் துவங்கின.தேரோடும் வீதியில் இஸ்லாமியர்கள் திட்டமிட்டு வீடுகளை வாங்கினார்கள். அதன் விளைவாக, தேரோடும் வீதியில் ஹிந்துக் கடவுள் ஊர்வலம் வரக் கூடாது என அழிச்சாட்டியம் செய்யும் அளவுக்கு, இஸ்லாமியர்கள் சென்றனர்.

2015-ல் மீண்டும் பிரச்னை வெடித்தது. மாரியம்மன் கோயில் திருவிழாவை 3 நாட்கள் நடத்தக்கூடாது என்று இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டல் விடுத்தன. அவர்களுக்கு அஞ்சி, மூன்று நாள் திருவிழாவை 2015ம் ஆண்டில் இரண்டு நாளாகக் குறைத்துக் கொள்ளுமாறு ஹிந்துக்களை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் நிர்பந்தித்தன. அதன்மூலமாக, தொடர்ந்து அடுத்த மூன்று ஆண்டுகளாக கோயில் திருவிழாவை இரண்டு நாட்களாக்கினர் இஸ்லாமியர்கள். அதன் நீட்சியாக 2018ம், கோயில் விழாவை இரண்டு நாட்கள் நடத்துமாறு மாவட்ட நிர்வாகம் வற்புறுத்தியது.

இதை ஏற்க மறுத்து உயர் நீதிமன்றத்தை நாடியது ஹிந்துக்கள் தரப்பு. தங்கள் கோயில்களில் திருவிழா நடத்த அனுமதி கோரி, வ.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எம்.ராமசாமி உடையார் வழக்குத் தொடுத்தார். அதனை எதிர்த்து சுன்னத் வால் ஜமாத் சார்பிலும் வழக்கு தொடுக்கப்பட்டது.அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, “பிரதான சாலைகளில் மட்டும் கோயில் ஊர்வலங்களை நடத்த வேண்டும்; மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியை நடத்தக் கூடாது’’ ஆகிய நிபந்தனைகளுடன், 2018 செப்டம்பர் 28ம் தேதி முதல் 30ம் தேதிவரை மூன்று நாள் திருவிழா கொண்டாட அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

ஆனால், வ.களத்தூர் பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் காரணம் காட்டி, பெரம்பலூர் சார் ஆட்சியர் விஸ்வநாதன் வி.களத்தூரில் செப். 28ம் தேதி முதல் அக். 4ம்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு நிர்வாகம், இஸ்லாமியர்களின் மிரட்டலுக்குப் பணிந்து ஹிந்து மக்களின் திருவிழாவையே தடை செய்தது. இதனை அடுத்து மீண்டும், நீதிமன்றத்தை கோயில் விழாக்குழுவினர் நாடினர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், பி.வேல்முருகன் அடங்கிய அமர்வு, பயங்கரவாத இஸ்லாமியருக்கு அஞ்சி நடுங்கும் அரசுக்கும், மக்களை மிரட்டி சமூகச் சமநிலையைக் குலைக்கும் சிறுபான்மையினருக்கும் நல்ல புத்தி வரும் வகையில் அற்புதமான தீர்ப்பை 2021 மே 8 அன்று அளித்துள்ளனர்.

“கோயில் விழாக்களை ஒட்டி, கிராமங்களிலும், நகரங்களிலும் அனைத்து சாலைகளிலும், தெருக்களிலும் ஊர்வலங்களை ஒழுங்குபடுத்தலாமே தவிர, தடை விதிக்க முடியாது. சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படாமல் காவல் துறையினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட
தைப்போல கோயில் ஊர்வலங்களை அனைத்துச் சாலைகளிலும் அனுமதிக்க வேண்டும்.மத சகிப்புத்தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல. மாற்று மதத்தவரின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் கோயில் மற்றும் மத ஊர்வலங்களை நடத்த அனைத்துப் பிரிவினருக்கும் அடிப்படை உரிமை உள்ளது.

கோயில் ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து ஊர்வலங்களும், அனைத்து சாலை, தெருக்களில் அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு பிரிவினரின் வழிபாட்டுத் தலம் குறிப்பிட்ட சாலையில் உள்ளதால், அந்தப் பகுதி வழியாக மற்றொரு பிரிவினர் ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்க முடியாது” -என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதன்மூலமாக காலம் காலமாக தங்கள் சொந்த மண்ணில் வழிபாட்டு ஊர்வலம் சென்று வந்த உரிமையை வ.களத்தூர் ஹிந்துக்கள் மீண்டும் பெற்றிருக்கிறார்கள். நீதிமன்றத் தீர்ப்பை இந்த ஆண்டேனும் இஸ்லாமியர்கள் மதிப்பார்களா, அரசு அதனை உறுதியுடன் நடைமுறைப்படுத்துமா என்று வ.களத்தூர் கிராம மக்கள் காத்திருக்கிறார்கள்.

ஜனநாயக நாட்டில், ஹிந்துக்கள் தங்கள் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டவே நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் போராட வேண்டிய துர்பாக்கியம் நிலவுவது உண்மையிலேயே வேதனைக்குரியது. மக்கள்தொகைப் பரவலில் நிகழும் மாற்றங்கள் சமுதாய அமைதியை எவ்வாறு பாதிக்கின்றவ என்பதற்கு வ.களத்தூர் பொருத்தமான உதாரணம்.நாட்டின் எந்த ஒரு பகுதியில் ஹிந்துக்களின் மக்கள்தொகை குறைந்து சிறுபான்மையினர் ஆகின்றனரோ, அப்பகுதியில் அவர்களது வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டு விடுகின்றன என்பதை உணர்ந்துகொண்டால் மட்டுமே, ஹிந்துக்களுக்கு எதிர்காலம். இதையே வ.களத்தூர் கிராமம் வெளிப்படுத்துகிறது.
-சேக்கிழான்