கல்விக்கொள்கையில் பயன்கள்

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார், ‘உயர் கல்வி நிறுவனங்களில் ஆன்லைன், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி முறைகளில் படிப்பதற்கு பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பழங்குடியின மாணவர்கள் சந்திக்கும் மொழிப் பிரச்சனையைப் போக்க, திறந்தவெளி முறையில் உள்ள பெரிய அளவிலான பாடங்கள் உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. சமூகத்தில் பலதரப்பட்ட பிரிவினருக்கு கல்வி உதவித் தொகை வழங்க, மத்திய அரசும் யு.ஜி.சியும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒற்றைப்  பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை, பெண்களுக்கு பி.எச்.டி படிப்புக்கு பிந்தைய கல்வித் உதவித் தொகை, பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் முதுநிலை படிப்புக்கான கல்வித் உதவித் தொகை, ஓ.பி.சி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, சிறுபான்மையினருக்கான மௌலான ஆசாத் கல்வி உதவித் தொகை போன்றவையும் வழங்கப்படுகின்றன’ என தெரிவித்தார்.