அடங்காத டிவிட்டர்

‘சட்டரீதியான உரிமைகள் ஆய்வகம்’ (@LegalLRO), ‘தலித் நேர்மறை இயக்கம் ‘(@DalitPositive) ஆகிய இரண்டு டிவிட்டர் கணக்குகளையும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, டிவிட்டர் நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. இவை இரண்டும் ஹிந்துக்களின் உரிமைகளுக்காகப் போராடும், பாரதத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல்கொடுக்கும் சட்டக் குழுக்களின் கணக்குகள். இதனை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், ‘கலிங்கா உரிமைகள் மன்றம்’ எனும் அமைப்பு, ட்விட்டரின் இந்த செயல்பாடுகள், இந்திய அரசியலமைப்பு சட்ட்த்தின் 19வது பிரிவை நேரடியாக மீறுகிறது.  பாரதத்தில் ட்விட்டரின் நடவடிக்கைகளைத் தடை செய்வது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளது.