கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிரா நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிர மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப், தங்கள் மாநிலத்தில் தடுப்பூசி டோஸ்கள் பற்றாக்குறை இருக்கிறது. தற்போது வெறும் 14 லட்சம் டோஸ்கள் மட்டுமே இருக்கின்றன. இது 3 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என கூறி மத்திய அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார். அவரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘மத்திய அரசின் முந்தைய ஒதுக்கீட்டை ஒப்பிடுகையில் மகாராஷ்டிராவுக்கு அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன. அங்கு தற்போது 23 லட்சம் டோஸ்கள் கையிருப்பு உள்ளன. இது 5 முதல் 6 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும். அதை சரியான முறையில் விநியோகிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால், சரியான திட்டமிடுதல் இல்லாததால் மகாராஷ்டிர அரசு 5 லட்சம் தடுப்பூசிகளை வீணடித்துள்ளது. இது ஒன்றும் சிறு தொகை அல்ல. தடுப்பூசி திட்டத்தை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை’ என கூறினார்.