பாகிஸ்தான் கால்பந்து அணி தடை

பாகிஸ்தான், லாகூரில் உள்ள கால்பந்து அமைப்பில் (பி.எப்.எப்), உலக கால்பந்து சம்மேளனம் (பிபா) ஹரூன் மாலிக் தலைமையில் நியமித்த குழுவை வலுக்கட்டாயமாக அகற்றிவிட்டு மற்றொரு குழு  தலைமையகத்தை அண்மையில் கையகப்படுத்தினர். இதனால், பாகிஸ்தானின் தேசிய மற்றும் கிளப் அணிகள் பிபாவின் சர்வதேச கால்பந்து போட்டிகளில் பங்கேற்க பிபா அமைப்பு தடை விதித்துள்ளது.  கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக பிபா வழங்கும் எந்த நிதியையும் பாகிஸ்தான் பெறமுடியாது.  அந்த நாட்டு அரசு தலையிட்டு இந்த பிரச்சினையை தீர்க்கவில்லை என்றாலோ அல்லது இந்த நிலை வெகு காலத்திற்கு நீடித்தாலோ,  பாகிஸ்தான் அனைத்து சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்தும் மிக நீண்ட காலத்திற்கு தடை செய்யப்படலாம். முன்னதாக இதேபோன்ற காரணங்களால், உலக கால்பந்து போட்டிகளில் விளையாட, அக்டோபர் 2017 முதல் மார்ச் 2018 வரை பிபாவால் ஆறு மாதங்களுக்கு பாகிஸ்தான் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.