ஐ.நாவில் பாகிஸ்தானுக்கு குட்டு

சுவிட்சர்லாந்த், ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைக்குழுவின் 46வது கூட்டத்தில் பேசிய பாரத துாதரகக் குழுவின் முதன்மை செயலர் பவன்குமார் பதே, ‘மோசமான பொருளாதார சூழலில் சிக்கியுள்ள பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை முதலில் நிறுத்த வேண்டும். தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினர் மீதான மனித உரிமை மீறல்களை கைவிட வேண்டும். பயங்கரவாதிகளுக்கு ஓய்வூதியம், புகலிடம் அளிப்பதையும் கைவிட வேண்டும்’ என்றார். மேலும், ‘பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் உள்ளதை அந்நாட்டு தலைவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். பாகிஸ்தானில், ஹிந்து, கிறிஸ்துவர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. சிறுபான்மையினரை கடத்துவது, கொல்வது, கட்டாய மதமாற்றம் செய்வது போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், பாகிஸ்தான், ஐ.நா சபையில், பாரதம் மீது பொய் பழி சுமத்துகிறது. பாரதத்தின் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட உள்நாட்டு பிரச்னைகளில் தலையிடுகிறது. இதனை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என பேசினார்.