உ லும் சோப்பெட்ப்னெங் தங்கப் பாலம்

ஷில்லாங். ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத், தனது மேகாலயாவின் இரண்டு நாள் பயணத்தின் இறுதிக் கட்டத்தில், புனித சிகரத்தின் கருவறை, பிரபஞ்சத்தின் தொப்புள் என கருதப்படும் உ லும் சோபெட்ப்னெங்கிற்கு சென்று செங் காசியில் பாரத மாதாவின் குடிமக்கள் நலன், வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்தார். செங் காசி என்பது 1899ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி பதினாறு காசி இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சமூக கலாச்சார மற்றும் மத அமைப்பாகும். 123 ஆண்டுகளுக்குப் பிறகு, செங் காசி அப்பகுதி முழுவதும் சுமார் 300க்கும் மேற்பட்ட கிளைகளாக வளர்ந்துள்ளது. அவர்களின் வேர்களையும் அடையாளத்தையும் வலுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அதன் நோக்கத்தில் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் அந்த புனித வளாகத்தில் ஒரு மரக்கன்றை நட்டுவைத்து அங்குள்ளோரிடம் உரையாற்றினார். அப்போது அவர், “இன்றைய தரிசனத்தை அனுபவித்ததற்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனிதனையும் கடவுளையும் இணைக்கும் தங்கப் பாலம் இப்போதும் தங்க இதயத்துடன் வாழ்கிறது என்ற உ லும் சோப்பெட்ப்னெங்கின் புனிதச் செய்தியை நாடு முழுவதும் கொண்டு செல்வேன்” என கூறினார். உ லும் சோப்பெட்ப்னெங் மனிதனை வானத்துடன் இணைக்கும் ஒரு தங்கப் பாலத்தின் இடமாக அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. இரு உலகங்களுக்கிடையில் பயணித்த புனித பதினாறு குடும்பங்களில் ஏழு குடும்பங்கள் அன்னை பூமியைக் கவனித்துக் கொள்ளவும், நீதியைப் பெறவும், சத்தியத்தைப் பரப்பவும் பூமியில் என்றென்றும் இங்கேயே தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.