அறநிலையத்துறை சட்ட முரண்

கடலுாரைச் சேர்ந்த கே.எஸ்.குருமூர்த்தி, அர்ஜுனன் இளையராஜா ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழக அரசு, மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்டவற்றை முறைப்படுத்த எந்த அக்கறையையும் காட்டுவதில்லை. ஆனால், ஹிந்துக்கள் வழிபடும் கோவில்களை கட்டுப்படுத்த மட்டும், ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டத்தைக் கொண்டு வந்தது. ஹிந்து கோவில்களை முறைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும், கொண்டுவரப்பட்ட சட்டம், அதன் நோக்கத்தை மாறி, கோவில்களை அரசு முழுக்கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கோவில்கள் இருந்தாலும், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, நிதி முறைகேடு, ஆகமம் மீறல் உள்ளிட்டவற்றிற்கு தவறாக பயன்படுத்தப்படுகிறது. மதச்சார்பற்ற நாடு என்று சொல்லும்போது, ஹிந்து கோவில்கள் மீது மட்டும் அரசு ஆதிக்கம் செலுத்துவது அரசியல் சட்டத்திற்கு முரணானது. எனவே, ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கு குறித்த ஆவணங்களை அரசு தரப்புக்கு வழங்க மனுதாரருக்கு அறிவுறுத்தி விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.