மாற்றம் மற்றும் இட ஒதுக்கீடு மாநாடு

விஸ்வ சம்வாத் கேந்திரா சார்பில், மதம் மாறிய பட்டியல் வாகுப்பினர் இடஒதுக்கீட்டின் பலனைப் பெற வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து விவாதிக்க மார்ச் 4 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு நாள் விவாதம் நடத்தப்படுகிறது. இது குறித்து தகவல் அளித்துள்ள நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் ஒப்பீட்டு அரசியல் மற்றும் அரசியல் கோட்பாட்டிற்கான மையத்தின் உதவிப் பேராசிரியருமான டாக்டர் பிரவேஷ் சௌத்ரி, “நாடு முழுவதும் உள்ள சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த தேசிய அறிவுசார் விவாதத்தில் பங்கேற்கின்றனர். இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது குறித்து சமூகத்தின் கருத்தைப் புரிந்து கொள்ள, முன்னாள் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு ஆணையத்தையும் அரசு அமைத்துள்ளது. இதைப் பற்றிய விவாதத்திற்காக, 2023 மார்ச் 4 மற்றும் 5ம் தேதிகளில், கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள கௌதம புத்தர் பல்கலைக் கழகத்தில் நாடு முழுவதும் உள்ள அறிவுசார் உலகின் முக்கிய நபர்கள் கூடுவார்கள். ‘மாற்றம் மற்றும் இடஒதுக்கீடு: கே.ஜி.பாலகிருஷ்ணன் கமிஷனின் சிறப்புக் குறிப்புடன்’ என்ற கருப்பொருளில் விவாதங்கள் நடகும்.

இந்த இரண்டு நாள் விவாதத்தில், மதமாற்றம் மற்றும் இடஒதுக்கீடு குறித்த முக்கிய விஷயங்கள் வாரியாக விவாதம் நடத்த முயற்சிக்கிறோம். சச்சார் கமிட்டியின் அரசியல் அமைப்பு, ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் மற்றும் அதன் பரிந்துரைகளுக்குப் பிறகு, மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்ற நிலை நாட்டில் உள்ள பட்டியல் சமூக சகோதரர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமூகத்தில் இது பற்றிய விவாதமும் நடந்து வருகிறது. மதம் மாறிய கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள், ஹிந்து மதத்திலிருந்து மதம் மாறிய பிறகும் அவர்களின் சமூக அந்தஸ்தில் எந்த மாற்றமும் இல்லை என்று சிலர் நம்புகிறார்கள். ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகள், அதன் செல்லுபடியாகும் தன்மை, ஆய்வு, பகுப்பாய்வு முறை மற்றும் காலம் குறித்து சமூகத்தில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. மறுபுறம், நாட்டின் பெரும்பான்மை சமூகம், ஹிந்து மதத்தை சார்ந்துள்ள பட்டியல், பழங்குடி சமூகத்தினர், அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அனைத்து வசதிகள், பிரதிநிதித்துவம் மற்றும் இடஒதுக்கீடுகளைப் பெற வேண்டும் என்று நம்புகிறார்கள். சமீபத்தில் மத்திய அரசு இதற்காக, கே.ஜி.பாலகிருஷ்ணன் கமிஷனை அமைத்துள்ளது.

இவ்வாறான நிலையில், இதுகுறித்து விவாதிப்பதற்காக சமூகத்தின் அறிவுஜீவி வர்க்கத்திற்கு சுதந்திரமான தளத்தை வழங்குவதற்காகவே இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் பேராசிரியர்கள், பள்ளிகளின் தலைவர்கள், துறைத் தலைவர்கள், துணைவேந்தர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்வது சிறப்பு. இதில் முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். விஸ்வ சம்வாத் கேந்திரா மற்றும் கௌதம புத்தர் பல்கலைக் கழகத்தின் கூட்டு முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விவாதத்தில், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் பயனளிக்கும் இதுபோன்ற சில விஷயங்கள் நிச்சயமாக வெளிப்படும்” என கூறினார். இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் கௌஷல் பவார் மற்றும் விஸ்வ சம்வாத் கேந்திராவின் விஜய் சங்கர் திவாரி ஆகியோரும் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.