சுவடியில் பயிற்சி

சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், சுவடியியல் குறித்த சிறப்புப் பயிற்சி, மார்ச் 1 முதல், 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. பங்கேற்க விரும்புவோர், தங்களின் சுயவிவரம், புகைப்படம், கல்வித்தகுதி சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து, www.ulakaththamizh.in என்ற, இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரும், 25ம் தேதிக்குள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, iits@tn.nic.in, iitstaramani@gmail.com என்ற, மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பயிற்சி கட்டணம் கிடையாது. பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். முதலில் விண்ணப்பிக்கும் 50 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.