சர்வதேசம் சமூகம் ஏற்ற மோடியின் திட்டங்கள்

கொரோனா மேலாண்மை குறித்த ஒரு பயிற்சிப் பட்டறையில், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவுகள், மொரிஷியஸ், நேபாளம், பாகிஸ்தான், செஷெல்ஸ், இலங்கை ஆகிய பத்து அண்டை நாடுகளின் சுகாதாரத்துறைத் தலைவர்கள், நிபுணர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் பாகிஸ்தான் தவிர மற்ற நாடுகள், பாரதம் அளித்த கொரோனா தடுப்பூசிகளுக்கும், அதற்கு முன்னர் அளித்துள்ள பல்வேறு மருந்துகள், உபகரணங்கள், பயிற்சிகள், உதவிகளுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தன. இந்த சந்திப்பில், ‘சோதனைகள், தொற்று கட்டுப்பாடு, மருத்துவக் கழிவு மேலாண்மை ஆகியவற்றில் அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்வது, சிறந்த நடைமுறைகளை கற்றுக்கொள்வது, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்காக ஒரு சிறப்பு விசா, பிராந்திய விமான ஆம்புலன்ஸ் ஒப்பந்தம், கோவிட் -19 தடுப்பூசிகளின் செயல்திறன் தரவுகளை ஒன்றிணைத்தல், தொகுத்தல், ஆய்வு செய்வதற்கான பொதுத்தளம்’ ஆகிய பரிந்துரைகளை பிரதமர் மோடி முன்வைத்தார். இந்த பரிந்துரைகளை பாகிஸ்தான் உட்பட அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டன.