மொரிஷியஸ் வாங்கிய டோர்னியர்

நமது ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்த டோர்னியர் – 228 ரக விமானம் ஒன்றை மொரிஷியஸ் வாங்கி உள்ளது மேலும் ஒன்றை குத்தகைக்கு எடுத்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று பாரதம் அந்த விமானத்தை இந்திய பெருங்கடல் பிராந்திய நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்துவதற்கான சாகர் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒப்படைத்தது. இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட மொரிஷியஸ் இந்திய தூதரகம், லைன் ஆப் க்ரெடிட் திட்டத்தின் அடிப்படையில் விமானம் வழங்கப்பட்டது. இது இருநாடுகள் இடையேயான கடல்சார் ஒத்துழைப்பை அதிகரிக்கும் என தெரிவித்தது. முன்னதாக, பிலிப்பைன்ஸ் அரசும் தனது கடலோர காவல்படைக்கு தமது துருவ் மற்றும் டோர்னியர் விமானங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது.