செப்டம்பர் 13 1990 அன்று நள்ளிரவு ஸ்ரீநகரில் உள்ள ஹப்பா கடல் என்ற பகுதியில் வாழ்ந்த காஷ்மீர் பண்டிட் திகா லால் தப்லூ என்பவரை அவரது இல்லத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகள் கொன்றனர். அங்கு முஸ்லிம்களால் நடத்தப்பட்ட ஹிந்து இன அழிப்பு கோரத் தாண்டவத்தில் கொல்லப்பட்ட முதல் காஷ்மீர் பண்டிட் திகா லால் தப்லூ. அவரின் நினைவு தினம் செப்டம்பர் 14ஐ, ஒட்டி, அந்த கோரத்தாக்குதலில் பலியான ஹிந்துக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘பலிதான் திவஸ்’ காஷ்மீரில் அனுசரிக்கப்படுகிறது. அவ்வகையில், காஷ்மீரில் பா.ஜ.க உறுப்பினர்கள் பயங்கரவாத தாக்குதலின் போது கொல்லப்பட்ட ஹிந்துக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது வீட்டின் நினைவிடத்திலும், அனந்த்நாகில் உள்ள பா.ஜ.க அலுவலகத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வையொட்டி, ஸ்ரீநகரின் ஷீதல்நாத் கோயிலிலும் மக்கள் திரண்டு இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வழிபாடு நடத்தினர்.