டிராவல்ஸ் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்

சென்னையில் இருந்து செயல்படும் ரேவதி பத்மாவதி டிராவல்ஸ் நிறுவனம் தலா 2,500 ரூபாய் கட்டணத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு சேவை டிக்கெட், உணவு வசதி ஆகியவற்றுடன் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் ஆகிய கோவில்கள் உட்பட ஐந்து கோயில்களில் பக்தர்களை சென்னையிலிருந்து அழைத்து செல்வதாக பிரச்சாரம் விளம்பரம் செய்திருந்தது. இது தவிர திருப்பதி ஏழுமலையான் கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில், காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் ஆகிய கோவில்கள் உட்பட ஐந்து கோவில்களில் அதே கட்டணத்தில் சாமி தரிசனம் வசதியும் செய்து கொடுக்கப்படும் என்றும் விளம்பரம் செய்திருந்தது. பக்தர்கள் வசதிக்காக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள், கல்யாண உற்சவம் டிக்கெட்டுகள் ஆகியவை ஒவ்வொரு மாதமும் 20ம் தேதியன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அந்த டிக்கெட்டுகளை பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து ஏழுமலையானை வழிபடலாம். ஆன்லைனில் பக்தர்கள் நேரடியாக பெற்றுக்கொள்ளும் வகையில் வெளியிடப்படும் டிக்கெட்டுகளை தனியார் டிராவல்ஸ் நிறுவனம் முன் செய்து பதிவு செய்து பக்தர்களை கோயிலுக்கு அழைத்து செல்வது தேவஸ்தான விதிமுறைகளுக்கு மாறான செயல். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை இது குறித்து விசாரித்து வருகிறது.