இவர்கள் இப்படிதான்

ஹிந்துத் தெய்வங்களை அவமதித்தும், மத்திய உள்துறை அமைச்சர் குறித்துத் தவறான தகவல்கள் கூறியும் சர்ச்சையில் சிக்கியவர் காமெடி நடிகர் முனாவர் பரூக்கி. இவர் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தார். இவர் மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில், ‘ராஜ்மோகன் காந்தி, மல்லிகா சரபாய், பூஜா பட், ஷோனாலி போஸ், ஆனந்த் பட்வர்தன், குணால் கம்ரா, சஞ்சய் ராஜோரா, அனுவாப் பால், பிரஷஸ்தி சிங், அரவிந்த் எஸ்.ஏ., உருஜ் திங்கங்கர், அனிர்பன் தாஸ்குப்தா’ உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் நடிகர்களும் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் ‘அமிதாவா குமார், தன்யா செல்வரத்னம்’ உள்ளிட்ட பத்திரிகையாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர் ஸ்ருதி ரியா கங்குலி, கனேடிய திரைப்படத் தயாரிப்பாளர் ஜான் கிரேசன், இங்கிலாந்து கட்டிடக் கலைஞர் சோபியா கரீம், பிரேசில் பெண்ணிய ஆர்வலர் சோனியா கொரியா உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால் ஓரிரு நாட்களுக்கு முன் டெல்லியில் அநியாயமாக கொல்லப்பட்ட பஜ்ரங்தள் இளைஞர் ரிங்கு சர்மாவுக்காக இவர்கள் வாய் திறக்கவில்லை. மேலும் ரிங்கு ஷர்மாவின் கொலை நடந்த மறுநாளில்தான் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.