விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கலசங்கள் திருட்டு

சிவராத்திரியை ஹிந்துக்கள் உற்சகமாக கொண்டாடி வரும் வேளையில், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கோயில் கலசங்கள் திருடப்பட்டுள்ளது. விருத்தகிரீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான கோயில் கலசங்கள் திருடப்பட்டுள்ளது. இதற்கு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கலசங்கள் திருடுபோனதில் ஏதேனும் சதி அல்லது உள்நோக்கம் இருக்கிறதா என்னும் கோணத்தில் விசாரிக்க வேண்டும், அரசு, இதை வெறும் திருட்டு வழக்காக மட்டும் பார்க்காமல் கோடிக்கணக்கான பக்தர்களின் பக்தி உணர்வையும், களவாடப்பட்ட கலசத்தின் தொன்மையையும், வரலாற்று சிறப்புகளையும் கருத்தில் கொண்டு திருடப்பட்ட கலசங்களை துரிதமாக மீட்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.