முஸ்லிம்கள் வளர்ச்சிக்கு வழி

அசாமில் வாழும் முஸ்லிம்களின் நலனுக்காக அவர்களது மதத்தைச் சேர்ந்த 150 முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை சந்தித்தார் அசாம் முதல்வர் ஹிம்மந்த் பிஸ்வாஸ் சர்மா. அதில், சிறுபான்மையினர் நலனுக்காக அரசு ஏற்படுத்தியிருக்கும் நலத்திட்டங்கள் குறித்து அவர்களிடம் விவரித்தார். அவர்களிடம், அசாம் மாநில முஸ்லிம்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது. இதனால் மாநில மக்கள்தொகை கட்டுக்குள் இருக்கும். மாநிலம் வளர்ச்சி அடையும்’ என கூறினார். பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்த அவர், அசாமில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த இந்த சந்திப்பு உதவியது. இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையின்போது வங்காள மொழி பேசும் முஸ்லிம் ஒருங்கிணைப்பாளர்கள் அழைக்கப்படுவார்கள். அசாமில் உள்ள முஸ்லிம்களின் சுகாதாரம், கல்வித்தரம், மக்கள் தொகை கட்டுப்பாடு, கலாச்சார மேம்பாடு, பொருளாதார மற்றும் அறிவுசார் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்த பா.ஜ.க அரசு தீவிர முயற்சி மேற்கொள்ளும். இவர்களுடனான இந்த கூட்டத்தின் முடிவை இன்னும் மூன்று மாத காலத்திற்குள் பத்திரிகைகள் பார்வைக்கு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.