தடுப்பூசி இலவசம்

கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனம், சில நிர்வாக காரணங்களுக்காக தடுப்பூசி விலையை சமீபத்தில் உயர்த்தியது. புதிய விலையின்படி தடுப்பூசியின் விலை மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுக்கு ரூ.400, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் டுவிட்டர் அறிக்கை ஒன்றில் ‘மருந்து நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு வாங்கும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளின் கொள்முதல் விலை ரூ.150 ஆக நீடிக்கிறது. மத்திய அரசு மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசியை தொடர்ந்து இலவசமாக வழங்கும்’ என தெரிவித்துள்ளது.