கொரோனாவை காரணம்காட்டி, ஹிந்துக்கள் வழக்கமாக ஆடி அமாவாசை காலத்தில் முன்னோர்களுக்கு கடற்கரை, குளக்கரைகளில் திதி கொடுப்பதற்கான அனுமதியை தி.மு.க தலைமையிலான தமிழக அரசு மறுத்துவிட்டது. அதேசமயம், ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் செயல்படுவதை மட்டும் கண்டும் காணாமல் விட்டுள்ளது. அவ்வகையில் திருச்செந்தூரிலும் ஆடி அமாவாசை முன்னிட்டு கடற்கரையில் முன்னோர்களுக்கான திதி கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் திதி கொடுக்க இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், வழக்கம்போல, அங்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அருகாமையில் உள்ள குளக்கரையில் திதி கொடுக்கப்பட்டது. நாட்டு விடுதலைக்காக போராடியவர்கள், உயிர்த்தியாகம் செய்தவர்கள், போரில் உயிரிழந்த ராணுவ வீரர்கள், பயங்கரவாதத்தால் உயிரிழந்தவர்கள், பணியில் உயிரிழந்த காவல்துறையினர் உள்ளிட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து திதி கொடுக்கப்பட்டது.