மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 137வது நாளாக விவசாயிகள் டில்லி எல்லையில் போராடி வருகின்றனர். இந்நிலையில், பாரதத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும்வரையில் எங்கள் கோரிக்கைகளில் எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ள நாங்கள் தயாராக இல்லை என விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார். ‘இது அதிகரித்து வரும் கொரோனா பரவலை மேலும் அதிகரிக்கவே வழி செய்யும் விபரீத முடிவு. இதே டில்லியில் 2019 இறுதியில் சி.ஏ.ஏவுக்கு எதிராக முஸ்லிம்கள் நடத்திய வன்முறை போராட்டமும் தப்ளிகா ஜமாத் மாநாடும் எந்த அளவுக்கு கொரோனா பரவலில் முக்கியத்துவம் வகித்தன என்பது அனைவருக்கும் தெரியும்’ என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.