கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் சில பயங்கரவாத ஆதரவு அமைப்புகளின் தூண்டுதலின் பேரில், பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவற்றை அணிந்து வரும் விஷமத்தனமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சில ஹிந்து மாணவ, மாணவிகள் காவித் துண்டு அணிந்து வந்தனர். இதனையடுத்து, கர்நாடக அரசு அனைவரும் சீருடை மட்டும்தான் அணிந்து பள்ளிகளுக்கு வரவேண்டும் என உத்தரவிட்டது. ஒருபுறம் அரசு உத்தரவினை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள் ஆங்காங்கு வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம், கர்நாடக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்புத் தெரிவித்ததோடு விசாரணையை கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.