மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள ‘உம்மத் பவுண்டேஷன்’ என்ற முஸ்லிம் அமைப்பு, கொரோனாவால் இறப்போரின் உடலை, குடும்பத்தினர் பெற்றுக் கொள்ள முன்வராத நிலை, இறந்தவரின் குடும்பத்தினரும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சூழலில், இறுதிச் சடங்கு செய்ய முடியாத நிலை போன்ற காலத்தில் அந்த குடும்பத்தினரின் ஒப்புதலுடன் மருத்துவமனையில் இருந்து இறந்தோர் உடல்களை பெற்று அந்தந்த மதத்தினரின் வழக்கப்படி இறுதிச் சடங்கு செய்கிறது. இதுவரை, 1,200 உடல்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்துள்ளது. உடலை புதைக்கும் போது அல்லது எரிக்கும்போது, அதை, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக குடும்பத்தினர் பார்க்க வசதி செய்து தருவதுடன் அந்த குடும்பத்தினர் கோரினால் இறந்தவரின் சாம்பலை எடுத்துத் தருகிறது.