உலகில் உயர்ந்த முத்துமலை முருகன்

சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையம் அருகில் மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வந்த, உலகில் மிக உயரமான முருகன் சிலை கொண்ட முத்து மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெறுகிறது. உலகில் மிக உயரமான முருகன் சிலையாக கருதப்படும் மலேசியாவில் உள்ள முருகன் சிலை 142 அடி உயரம் உள்ளது. தற்போது சேலத்தில் புத்திர கவுண்டம்பாளையம் முருகன் சிலை 146 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதுதான் தற்போது உலகின் மிக உயர்ந்த முருகன் சிலை என்ற சாதனை படைத்துள்ளது. சுமார் 3 கோடி ரூபாய் செலவில், 146 அடி உயரத்தில், வசீகரிக்கும் சிரித்த முகத்துடன், வலது கை அபயஹஸ்த முத்திரையுடன் ஆசீர்வதிப்பது போன்றும், இடது கையில் வேலை பிடித்தும் மணிமகுடம் சூடிய நிலையில் ஆடை அணிகலன்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் முருகன். மலேசியாவில் முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் தியாகராஜப் ஸ்தபதியின் குழுவினர் தான் இந்த முருகன் சிலை வடிவமைப்பிலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.